தூத்துக்குடி மே 18
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும்
அனைத்து மாவட்டங்களிலும்
தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் பொது மக்களுக்கு உதவிடும் வகையில்
பல்வேறு சிறப்புமிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின்படி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும்
பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் இணைந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி தூத்துக்குடியில்
தவெக மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பாளர்
எஸ்.டி.ஆர் சாமுவேல்ராஜ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும்
முன்னுதாரணமாக
தூத்துக்குடியில் பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர்கள், பள்ளி குழந்தைகள் என அனைத்து தரப்பினர்களும் பயன்படும் வகையில் பல்வேறு செயல் திட்டங்களை
சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மத்திய மாவட்ட
தவெக பொறுப்பாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மக்கள் பணிகள் அனைத்தும்
தமிழக வெற்றி கழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்து வருகிறது . குறிப்பாக தூத்துக்குடியில் கோடை வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி
தவெக மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பாளர்
எஸ்.டி.ஆர் சாமுவேல்ராஜ் ஏற்பாட்டில் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது வரை அனைத்து நீர்மோர் பந்தலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அதுபோல் பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளி விடுமுறையை
பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில்
குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகள் சிறப்பாக
கடந்த 15 நாட்களாக தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நடத்தி அதில்
நடன வகுப்புகள், கை எழுத்து பயிற்சி வகுப்புகள், ஓவிய பயிற்சி வகுப்புகள் என பல்வேறு பயிற்சிகளை
இந்த சிறப்பு முகாமில் நடத்தியது மட்டுமல்லாமல்
இந்த மாபெரும் நிகழ்ச்சியில்
கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தினார் மாவட்ட பொறுப்பாளர் சாமுவேல்ராஜ்,. அதுபோல் மேலும் ஒரு சிறப்பாக
தூத்துக்குடி
தவெக மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து நாள் தோறும் சுமார் 250 நபர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து 60 தினங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இதில் அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தனியார் அகடாமியில் பயின்று வரும் நிலையில் மேற்கண்ட மாணவர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து தூத்துக்குடியில் தங்கி படித்து வருகிறார்கள். அதில் உள்ள மாணவர்கள் பலரும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழங்கப்படும் மதிய உணவை நாள்தோறும் உட்கொண்டு தங்களது படிப்பினை தொடர்ந்து வருகிறார்கள். மேலும் தூய்மை பணியாளர்கள் பலரும் வந்து மதிய உணவை உட்கொள்கிறார்கள்
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பழமொழிக்கு ஏற்ப
தொடர்ந்து சுமார் 60 தினங்களுக்கு மேலாக மதிய உணவை நாள்தோறும் வழங்கி அசத்தி வருகிறார்
தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளர் சாமுவேல் வேல்ராஜ்
அதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடியில் உள்ள மகளிர்கள் பலரும் பயன்படும் வகையில் குறிப்பாக
கைம்பெண்கள், மற்றும் ஆதரவற்ற மகளிர், ஏழை எளிய பெண்கள், என அனைத்து தரப்பு மகளிர்களும் பயன்பெறும் வகையில் தவெக மத்திய மாவட்ட பொறுப்பாளர்
எஸ்டிஆர் சாமுவேல் ராஜ் நல்ல ஒரு செயல் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்
குறிப்பாக பெண்கள்
சுய தொழில் செய்வதற்கு
சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதற்காக மகளிர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி வகுப்புகளை
நேற்று வெகு சிறப்பாக துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் சுயமாக தொழில் செய்ய ஏதுவாக பொதுமக்கள் இன்றியமையாத பொருளாக பயன்படுத்தி வரும் வாஷிங் பவுடர் தயாரித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில்
அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியினை தவெக மகளிர் அணி நிர்வாகி திலகா சிறப்பாக மகளிர்களுக்கு எளிய வழியில் செயல்முறைகளை விளக்கி பயிற்சி வகுப்புகள் நடத்தினார் இதில் வாஷிங் பவுடர் தயாரிப்பதற்கு என்னென்ன மூலப் பொருள்கள் எவ்வளவு அளவு சேர்க்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றி கழகம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் பேசியதாவது : தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களின் ஆணையின்படி, பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தவெக தொண்டர்களுடன் இணைந்து சிறப்பாக செய்து வருகிறோம்
அதன்படி தற்போது
கைம்பெண்கள், மற்றும் ஆதரவற்ற மகளிர், ஏழை எளிய பெண்கள், என அனைத்து தரப்பு மகளிர்களும் சுய தொழில் செய்வதற்கு
சிறந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான பயிற்சி வகுப்புகளை
இன்று துவக்கி வைத்துள்ளோம். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகிறார்கள் பெண்கள் சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு தற்போது வாஷிங் பவுடர் தயாரிக்கும் செயல்முறைகளை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் அனைவருக்கும் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதனை பிறருக்கு விற்பனை செய்து அதன் மூலம் தங்களது வருவாயை பெருக்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும் அது மட்டுமல்லாமல் இந்த பயிற்சி முழுவதுமாக நிறைவுற்ற பிறகு
அதற்கு அடுத்தார் போல் மகளிர் அனைவருக்கும் ஆரி ஒர்க் கற்றுக் கொள்வது குறித்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடைபெறும் பெண்கள் அனைவரும் இதில் திரளாக பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார். இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

