==============
தூத்துக்குடி, மே, 16,
ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா குறித்து அவதூறாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பொதுமக்கள், பெண்கள், என சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் லாரன்ஸ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது வாட்ஸ் அப் செல் நம்பர் 8056518242 ஆகும். ONLY VIP என்ற வாட்ஸ் அப் குழுவில் எனது செல் நம்பரை A.இளையராஜா அவர்கள் உறுப்பினராக சேர்ந்துள்ளார். மேற்படி வாட்ஸ் அப் குழுவில் 14.05.2025 தேதியன்று இரவு சுமார் 9.04 மணியளவில் 8015176060 என்ற எண்ணிலிருந்து “சிலை கடத்தலில் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா ஈடுபட்டுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் – தூத்துக்குடியில் பரபரப்பு ”
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள சாமிநத்தம் பகுதியை சதீஸ், பிரதாப் மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி, வெற்றி ஆகியோர் நேற்றிறவு 13.05.2025 அன்று சுமார் 25 கிலோ எடையுள்ள அம்மன் சிலையை காரில் வைத்து கடத்தியதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருநெல்வேலி மண்டல சிலைக் கடத்தல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். மேற்கண்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணியை சேர்ந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து பெரிய அளவிலான வரவு செலவு அப்படையில் இச்சிலை கடத்தல் சம்பவத்தில் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய அண்ணன் தொழிலதிபர் அயிரவன்பட்டி முருகேசன் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இச்சிலை கடத்தல் சம்பவத்தில் எம்எல்ஏ சண்முகையா மற்றும் தொழிலதிபர் அயிரவன்பட்டி முருகேசன் உள்ளிட்டவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன” என்று அவதூறான செய்தி வந்துள்ளது.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருக்கு மேற்படி சிலை கடத்தல் சம்பவத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது. சம்மந்தமே இல்லாமல் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்பி வருகின்றனர். மேற்படி செய்தி பல வாட்ஸ் அப் குழுவிலும், இணையதளங்களிலும் பரப்பி வருகின்றனர். மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்காக தினமும் அயராது உழைத்து வருகின்றார். அவருடைய அரசியல் வளர்ச்சியை பிடிக்காத நபர்கள் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தில் பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்பி வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேற்படி வதந்தி செய்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவுகிறது.
8015176060 எண்ணை ONLY VIP வாட்ஸ் அப் குழுவில் A.இளையராஜா (ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் & ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ) அவருடைய செல் நம்பரான 9677333111 நம்பரிலிருந்து கடந்த 28.04.2025 தேதியன்று உறுப்பினராக சேர்ந்துள்ளார். இளையராஜாவை விசாரித்தால் மேற்படி செல் நம்பர் யாருடையது அந்த நபரின் பெயர், முகவரி தெரிய வரும்
ஆகையால் 8015176060 என்ற எண்ணிலிருந்து உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை உருவாக்கி பரப்பி, வதந்திகளை ஏற்படுத்தும் நபர் மீதும், மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் வாட்ஸ்அப் குழுவின் அட்மின் இளையராஜா மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும் படியும். மேலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மீது அவதூறான செய்திகள் வெளிவராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும் படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் லாரன்ஸை தொடர்ந்து, மேல வேலாயுதபுரம் ஞானசேகர், கள்ளத்தை கிணறு கிராமம் செல்லத்துரை, குறுக்குச்சாலை எ குமாரபுரம் பகுதியைச் சார்ந்த ஹரி பாலகிருஷ்ணன், உள்ளிட்ட பலரும் சண்முகையா எம்எல்ஏ மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனித்தனியாக எஸ்பி இடம் புகார் மனு அளித்தனர். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பெண்கள் இளைஞர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

