சி.வ.குளம், முள்ளிக் குளத்தை ஆழப்படுத்துவதற்காக 12 கோடி செலவிடப்பட்டும் உரிய பராமரிப்பு இன்றி கிடப்பதாக பெருந்தலைவர் மக்கள் நல சங்க நிறுவன தலைவர் எஸ் பி மாரியப்பன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் நல சங்க நிறுவன தலைவர் எஸ் பி மாரியப்பன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சில்வர் புரம் சர்வே எண் 336/2 உள்ள சி வ குளம் 129 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தை ஆழப்படுத்தும் பணி, முள்ளிக்குளம் பராமரிப்பு பணி 2019 ஆம் ஆண்டு ரூபாய் 11.50 கோடி செலவில் ஆழப்படுத்தும் பணி நடந்துள்ளது. ஆனால் அதற்கு பிறகு திமுக அரசு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ரூபாய் ஒரு கோடி செலவில் நடைபாதை அமைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு திமுக அமைச்சர் கே என் நேரு பார்வையிட்டு உள்ளார். ஆனால் இவ்வளவு பணம் செலவழித்து இன்று வரை ஒரு பொதுமக்கள் கூட பயன்பெறும் வகையில் அமைக்கப்படவில்லை, இந்த குளத்திற்கு செல்லும் வழி பாதை பூட்டப்பட்டு சீமை கருவேல முருக்களாக காட்சியளிக்கிறது.
இந்த குளத்திற்கு முறையான வாய்க்கால்கள் அமைக்காததால் குளத்தில் தண்ணீர் நிரம்ப வில்லை, மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை மேம்படுத்தினால் சுற்றுவட்டார மழை நீரை சேமிக்கலாம் தூத்துக்குடிக்கு வெள்ளம் வரும்போது இந்த குளம் யாருக்கும் பயன்படாமல் இருக்கிறது பெயர்தான் குளம், ஆனால் தண்ணீர் இருக்காது, நடைபாதைக்காக அமைக்கப்பட்ட இரும்பு வேலிகள் உடைந்தும் கான்கிரீட் கட்டமைப்புகள் அனைத்தும் சிதிலமடைந்தும் மிகவும் மோசமான ஒரு நிலைமை உருவாகி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குளத்தின் இருபுறங்களிலும் காண்கிரீட்டு தடுப்பு சுவர் அமைத்து அதன் பிறகு நடைபாதைகள் அமைத்திருந்தால் குளத்தின் கரைகள் உடைத்திருக்காது.
ஆனால் மேற்படி குளத்தினை சுற்றி மண் குவியல்கள் குவிக்கப்பட்டு அதன் மேல் நடைபாதை அமைக்கப்பட்டதால் மழை நீரில் சிதலமடைந்து யாருக்கும் பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கிறது. குளத்தின் அனைத்து கறைகளும் மழை நீரில் உடைந்து பல லட்ச ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தை தனிநபர்கள் ஆக்கிரம்பு செய்யும் சூழல் உருவாகிறது. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் அமைந்துள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்து தனிக் கவனம் செலுத்தி பாதுகாக்க அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் மாண்புமிகு முதலமைச்சர் இதுகுறித்து இதில் நடைபெற்ற ஊழல் குறித்தும் மக்களின் வரிப் பணத்தை விரயமாக்கியது குறித்தும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு எதிராக பெருந்தலைவர் மக்கள் நல சங்க நிறுவன தலைவர் எஸ் பி மாரியப்பன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ள விசயம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

