====================
தூத்துக்குடி,மே,12
தூத்துக்குடியில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி
71 வது பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 5000 ஏழை எளிய பொது மக்களுக்கு மெகா நலத்திட்டங்களை அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான
சி.த. செல்லப்பாண்டியன்
வழங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தாா்.
இதனையடுத்து தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் இதற்கு முன்பு 6 கட்டங்களாக சுமார் 20,000 பேர்களுக்கு மெகா நலத்திட்ட உதவிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான
சி.த. செல்லப்பாண்டியன்
வழங்கினார். இந்நிலையில்
இரண்டு கோடி தொண்டர்களின் நம்பிக்கை, புரட்சித்தமிழர், கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி. பழனிசாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, 7 வது கட்டமாக கழக வர்த்தக அணி சார்பில், நலத்திட்ட நாயகன் கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் ஏற்பாட்டில், சுமார் 5000 நபர்களுக்கு மெகா நலத்திட்டங்கள் வழங்கும் விழா, நேற்று முன்தினம் மாலை சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆர் திடலில் வைத்து நடைபெற்றது.



இதில் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சிக்கு கழக வர்த்தக அணி துணை செயலாளர் ஆர்.எல். ராஜா தலைமை தாங்கினார். நலத்திட்டங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் பேசுகையில் அதிமுகவை தொடங்கி எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் எல்லாம் நன்மை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினாா். அவரது மறைவிற்கு பிறகு அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதா பொதுச்செயலாளராக பணியாற்றி இந்திய அரசியலில் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக
5 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்து எழை எளிய மக்கள் துயர் போக்க என்னற்ற நலத்திட்டங்களை தீட்டி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் அவர் முதலமைச்சராக இருந்த காலம் வரை மாணவர்களின் நலன் கருதி பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மடிக்கணினி சைக்கிள் எனவும் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்குதங்கம் ரொக்க பணம் மிக்ஸி மின்விசிறி போன்ற பல்வேறு நல்லத்திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் நலன் கருதி வாழ்ந்தாா். மீனவ மக்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா மீதும் அதிமுக மீதும் பற்றுள்ளவா்கள் ஜெ மறைவிற்கு பின் நான்கரை ஆண்டுகாலம் ஜெயலலிதா வழியில் மக்கள் ஆட்சி நடத்தினாா் எடப்பாடியாா்
ஏழைகளின் பசி தீர்க்க அம்மா உணவகம்
குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க அம்மா மருந்தகம்,
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்,
மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற மகத்தான திட்டங்கள் தந்தார். எடப்பாடியார். அவரது ஆட்சியில் பெண்கள் குழந்தைகள், பாதுகாப்பாக வாழ்ந்தனர், தற்போது திமுக ஆட்சியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது. போதைப் பொருள் புழக்கம் தமிழகத்தில் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. மீண்டும் தமிழக மக்கள் நிம்மதியுடன் வாழ
முன்னாள் முதல்வர்
எடப்பாடியாரின் பொற்கால ஆட்சி மீண்டும் தொடர அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் இப்போதே தயாராகி கொள்ளுங்கள் என்று பேசினார்
தூத்துக்குடியில்
7 வது கட்டமாக எடப்பாடியார் பிறந்தநாள் முன்னிட்டு வர்த்தக அணி சார்பில் ஏழை எளிய பொதுமக்கள் ஆகியோருக்கு சைக்கிள், தையல் இயந்திரம், மிக்ஸி கிரைண்டர், இட்லி குக்கர், குடம், மீன் விற்பனை செய்வதற்கு சட்டி, வேஷ்டி சேலை , அரிசி மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்து உபகரண பொருட்களும் மெகா நலத்திட்டமாக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் வழங்கினார். இந்த
நிகழ்ச்சியின் போது மாற்று கட்சியில் இருந்து சுமார் 100 இளைஞர்கள்
ஆர்.எல். ராஜா ஏற்பாட்டில் கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக அதிமுக கட்சியில் இணைந்த இளைஞர்கள் அனைவருக்கும் அதிமுக தூண்டு அணிவித்து வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகவர்ணம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், மாவட்ட மீனவரணி பொருளாளர் அந்தோனியப்பா, முன்னாள் நகர் மன்ற தலைவர், விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன் .மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் துணை செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சகாயராஜ் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், முன்னாள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் ராஜா சிங், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் உமரி ராஜேஷ் குமார், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர்
ரத்தினம்,
வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ்,
33 வட்ட பிரதிநிதி ராஜசேகர்,
முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கோட்டாளமுத்து, எம்.ஜி.ஆர் மன்றம் நெப்போலியன், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், அந்தோனி ராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள் ஜெகதீஸ்வரன், பாபநாசம் கருப்பசாமி, பண்டாரம்பட்டி கருப்பசாமி, L.S. சேவியர், முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன், புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி இயக்குனர் சுப்பிரமணியன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் காயல் அன்வர், காயல் பட்டினம் முன்னாள் நகர செயலாளர் எம்.ஜே. செய்யது இப்ராஹிம், முன்னாள் காயல்பட்டினம் சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பா, ஜேடியம்மா, சாந்தி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவ சுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்பிரமணியன், சங்கரி, மின்சாரப் பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன், தெர்மல் திட்ட செயலாளர் அய்யாசாமி, மீனவர் சங்க பிரதிநிதிகள், ஜேசுராஜ், பாலன், உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் பெருமாள் தாய், மாவட்ட மகளிர் அணி சாய் சுதா, கழக பேச்சாளர் அனல் ராஜசேகர், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ராஜ் குமார், பூல் பாண்டியன், முத்துக்குமார், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன் அபு தாஹிர் மற்றும் ஸ்டாலின், அந்தோனி ராஜ், தனுஷ், பாபநாசம், அந்தோனி செல்வராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், சுப்புராஜ், ஆபிரகாம், முனியசாமி, தளவாய்புரம் காசி, நயினார், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுகம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன், அரசு, ராஜா மகளீர் அணியினர் ஜிபுலியா , பபினாம்மா, துரைச்சி, பாப்பா, ஜீவா, ரெக்ஸி, முத்துலட்சுமி, சுப்புலட்சுமி, முத்துமாரி, காளியம்மா, கன்னியம்மா, சாந்தா, பஞ்சவர்ணம் மற்றும் அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

