==============
தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையிலும், பொதுமக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டுமென தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆணையின்படி பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் பொதுமக்களுக்காக பல்வேறு நலப் பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி
தவெக நிர்வாகிகள் சார்பில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை முன்னிட்டு பொது மக்கள் கூடும் பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறப்பது, கோடை விடுமுறை காலங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்துவது , தூய்மை பணியாளர்களுக்கு உதவுதல் போன்ற எண்ணற்ற பணிகளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி மாநகரில் உள்ள
பி என் டி காலணியில் வைத்து இன்று தமிழக வெற்றிக் கழகம்
தூத்துக்குடி
மத்திய மாவட்ட கழகம் சார்பில்
மெகா இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். இந்த மருத்துவ முகாமை
தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர்
எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும்,
சுமார் 50 க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்
சிவகுமார், சதீஷ் குமார், மகேஷ், விஜய் சுபாகர், வசந்த குமார், சீமான், பாபு, கருப்பசாமி, மரியா, ஜூடி மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, வார்டு மற்றும் கிளை தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பயன்படும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாட்டை சிறப்பாக செய்த
தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

