தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் பல இடங்களில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கி வருகிறார்.

அதன்படி இன்று (04/05/25) தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதியான லூர்தம்மாள் புரத்தில் கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் மோர் பந்தலை அஜிதா ஆக்னல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்ப்பூசணி, சர்பத், ரோஸ்மில்க், வாழைப்பழம் போன்றவைகளை வழங்கினார்.இந்த
நிகழ்ச்சியில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 7 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

