தூத்துக்குடி, மே, 5
அரசியல் களத்தில் புயல் வேகத்தில் முன்னேறி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் பட்டாளம் தூத்துக்குடியில் தற்போது பெருகி வருகிறது.
நேற்று தூத்துக்குடி மாநகராட்சியின் 20வது வார்டு திமுக வின் கோட்டை என்று அழைக்கப்படும் இந்த வார்டு பகுதியில் இருந்து மட்டும் சுமார்
200-க்கும் மேற்பட்ட பொது மக்கள், மகளிர்கள் திரளாக நடிகர் விஜய் ஆரம்பித்து உள்ள புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜித ஆக்னல் முன்னிலையில் இணைந்தனர். அமைச்சர், மற்றும் மேயர், ஆகியோருக்கு மிகவும் சாதகமாக இருக்கும் வார்டு எனவும் இப்பகுதி திமுகவின் கோட்டை என்றும் கூறப்பட்டு வந்த நிலையில்
ஒரு சில நபர்கள் கூட
திமுகவில் இருந்து
மாற்றுக் கட்சிக்கு இந்த வார்டு பகுதியில் இருந்து செல்ல மாட்டார்கள்
என்ற ஒரு நிலையிலிருந்து தற்போது மாறி திடீரென ஒரே நேரத்தில் சுமார் 200 க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது திராவிடக் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


அதிர்ச்சி!!!
============
தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் N.ஆனந்த் தீவிர வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னின்று நடத்திய இந்த சங்கமம், எதிரணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து
தூத்துக்குடி தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
“இது வெறும் தொடக்கம் மட்டுமே! வரும் நாட்களில் எதிரணிகளை உலுக்கும் வகையில் மேலும் பல இணைப்பு நிகழ்வுகள் தூத்துக்குடியில் நடைபெறும்” என்று …தூத்துக்குடி தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் உறுதிபடக் கூறினார்.
தூத்துக்குடியில் சமீப காலமாக அதிமுக திமுக விற்கு நிகராக
தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு, பொதுமக்கள் அடிப்படை பிரச்சனைக்காக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிப்பது ஆலயம், கோவில், மசூதியென பாகுபாடு இல்லாமல் அனைத்து நிகழ்வுகளிலும்
தவெக நிர்வாகிகள் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தூத்துக்குடியில் நடைபெற்று வருவதாகவும் இவை அனைத்தும் பொதுமக்கள் சார்ந்த பிரச்சனைக்கு தமிழக வெற்றி கழகம் முன்னின்று குரல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த அதிரடி நகர்வு, வரவிருக்கும் 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கான பலமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக மற்றும் திமுக பார்வை தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் திரும்பி உள்ளது…

