===================
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின்படி கழக பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதல்படி
கடந்த 12 நாட்களாக தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வந்த குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகள் 21/04/2025 முதல் 03/05/2025 வரை நடன வகுப்புகள், கை எழுத்து பயிற்சி வகுப்புகள், ஓவிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகரிலிருந்து ஏராளமான மாணவ மாணவியர்கள் பங்கேற்றார்கள். இதில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த மாபெரும் நிகழ்ச்சியில்
கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் படம் பொறித்த கோப்பைகளையும் தவெக மத்திய மாவட்ட செயலாளர் SDR சாமுவேல்ராஜ் வழங்கினார். இதில் பங்கேற்ற பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும், தூத்துக்குடியில் இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சி நடத்திய மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ்க்கும் மற்றும் தமிழக வெற்றிக்கான நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளை மாணவ மாணவியர்களுக்காக தமிழக வெற்றி கழகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் பொதுமக்கள் முன்வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிவகுமார், சதீஷ் குமார், மகேஷ், விஜய் சுபாகர், ஜோஷப் ஆனந்த், முருகன், பிரான்சிஸ், மரியா, ஜூடி, காயத்திரி, ஞானம், சித்ரா, உட்பட ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

