தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினராக
பிரபல வழக்கறிஞர் முனீஸ் குமார் தேர்வு : முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து!!
================
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்புகள் மூலம் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
வழக்கறிஞர் சங்கத் தேர்தல்
.முடிவுகள் அறிவிக்கப்பட்டு தலைவராக எஸ்பி வாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தில் தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரிகளாக வழக்கறிஞர்கள் ஸ்டீபன் அந்தோணி ராஜ், பிள்ளை விநாயகம், ராஜசேகர் சுப்பையா ஆகியோர் செயல்பட்டனர். சங்கத்தில் உள்ள 780 உறுப்பினர்களில் 704பேர் வாக்களித்தனர். பின்னர் அன்று மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில், வழக்கறிஞர் சங்கத் தலைவராக எஸ்பி வாரியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் துணைத் தலைவராக சிவசங்கர், செயலாளராக செல்வின், இணைச் செயலாளராக பாலகுமாரன், பொருளாளராக கணேசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக வழக்கறிஞர்கள் முனீஸ் குமார் அரிமுருகன், சார்லஸ், மணிகண்டன், ராஜ்குமார், ரமேஷ் செல்வகுமார், விக்னேஷ், முருகன், பிரவீன்குமார், ஸ்ரீநாத் ஆனந்த், தமிழ்செல்வி, யூஜியானா, உஷா, ரெக்ஸ் அன்டோ ரோஷிடா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் முனீஸ் குமார் பல்வேறு நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். பல்வேறு மக்கள் நலப் பணிகளில் வழக்கறிஞர் முனீஸ் குமார் முன் நின்று செயல்படுபவர். பல்வேறு வழக்குகளில் திறம்படவாதிட்டு சிறந்த வழக்கறிஞர் என்ற பெயரை பெற்றவர். அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவிகளை செய்து கொடுத்த பெருமை அவருக்கு சாரும் இந்நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க நிர்வாக குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிரபல வழக்கறிஞர் முனீஸ் குமாருக்கு பல்வேறு அமைப்பினர்கள், அரசு அதிகாரிகள் காவல்துறையினர், என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

