===============
தூத்துக்குடி, மே 3:
தூத்துக்குடியில் நாளை (4ம் தேதி) அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத் துரை மகள்
பூப்புனித நீராட்டு விழா
நடைபெறுகிறது.
அதிமுக அமைப்பு செயலாளரும், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான என்.சின்னத்துரை – கோகிலவர்த்தினி தம்பதியின் புதல்வி என்.சி.அபிஷா பூப்புனித நீராட்டு விழா, நாளை (4ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை
காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் வைத்து வெகு சிறப்பாக நடக்கிறது.
இந்த விழாவில்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்
நாளை காலை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள்
பலர் தூத்துக்குடிக்கு இன்று மாலையே வருகை தந்துள்ளனர்
இதனால் தூத்துக்குடியில் அதிமுக கொடியுடன் வாகனங்கள் ஏராளம் வலம் வருகின்றனர் இதற்கான ஏற்பாடுகளை சின்னத்துரை மற்றும் அவரது குடும்பத்தினர் மிக பிரம்மாண்டமாக செய்து வருகின்றனர்.

