===============
தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார்.
புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்று கொண்ட நயினார் நாகேந்திரனுக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சிகள் சார்ந்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.


அவருடன் மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல முன்னாள் இணைச்செயலாளர் சங்கர், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

