தூத்துக்குடி, மே,2
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளாா். அதன் வழியில் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் இளைஞர் அணி நிர்வாகிகளை பல கட்டங்களாக ஆலோசனை கூட்டம் மூலம் நோில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளாா்.
இந்நிலையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிற்கிணங்க கிழக்கு ஒன்றிய திமுக சமூக வலைதள இணைப்பிற்கான பாக முகவர்கள் கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணைச்செயலாளரும் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளருமான பெருநாழி போஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ் கலந்து கொண்டு வலை தளங்களில் பணியாற்றுவது குறித்து சிறப்புறையாற்றினார்கள்.
ஆலோசனை கூட்டத்தில் ஓன்றிய அவைத்தலைவர் ஜோதிடா் முருகன், துணைச்செயலாளா்கள் கணேசன், வசந்தகுமாாி, ராமசந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாாிமுத்து, மாவட்ட பிரதிநிதி சிவக்குமாா், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பாகமுகவர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

