திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் பலரையும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு விருதுகளுக்கு தோ்வு செய்து கவுரவித்து வருகின்றனா். அதே போல் ஓவ்வொரு மாவட்டத்திலும் கடமை உணா்வோடு பணியாற்றுபவர்களையும் தோ்வு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் விருதுகள் வழங்கி ஊக்குவித்து வருகின்றனா்.
இந்நிலையில் காவல்துறையில் சேர்ந்த காலம் முதல் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளை வகித்து பல மாவட்டங்களில் பணியாற்றிய சந்தனகுமாா், டிஎஸ்பியாக பொறுப்பேற்று ஆய்தபடை காவல் பணியை செய்து வந்தாா். கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்ற அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பட் ஜான் பாராட்டி பாிசுகளை வழங்கினாா்.

பின்னா் கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாநகர ஏஎஸ்பி மதன், ரூரல் டிஎஸ்பி சுதீர், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஓய்வு ரவிசந்திரன், வள்ளியூா் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, ஆயதபடை காவல்ஆய்வாளர் சுனை முத்து, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் துணை ஆய்வாளர் வெங்கடேஷ், அதிமுக தொழிற்சங்க டாஸ்மாா்க் செயலாளர் விஜயகுமாா், ரோட்டாி கிளப் தலைவர் தா்மசீலன், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு நலச்சங்க ஓருங்கிணைப்பாளர் பேச்சியப்பன், முன்னாள் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம், கௌரவ ஆலோசகா்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், முத்துராமன், உறுப்பினர் மாாிமுத்து, பத்திாிகைதுறையை சோ்ந்த ராஜாசாலமோன், அலெக்ஸ், கனகராஜ், உள்பட காவல்துறை பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்த பலர் வாழ்த்துக்களை தொிவித்தனா்.

