=====—————–
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) வாயிலில் தவெக தோழர்கள் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இதனை தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திறந்து வைக்க இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை நேற்றிலிருந்து தவெக நிர்வாகிகள் நீர் மோர் அமைக்கும் விதமாக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீர் மோர் பந்தல் அமைக்க முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் நீர் மோர் பந்தலை அகற்றி விட்டனர். இந்த சம்பவம் அறிந்து நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு தமிழக வெற்றிக்கழகம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மற்றும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து குவிந்தனர்.
நீர்மோர் பந்தல் அமைப்பதற்கு
மாநகராட்சி நிர்வாகத்துடன் முறையாக அனுமதி கடிதம் கொடுத்ததாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தற்போது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாகவும் கூறிய தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள்
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தவெக
மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து பழைய வாயிலில் சாலை மறியலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
இதனால் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. சம்பவம் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கர் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது தாங்கள் சாலை மறியலை கைவிடுங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட தூத்துக்குடி மாநகரில் ஒரே நாளில் 5 இடங்களில் நீர் மோர் பந்தல் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திறந்து வைத்தார். கடந்த 20 தினங்களாக தூத்துக்குடி மாநகர் முழுவதும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் பல இடங்களில் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அருகே மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்க இவ்வளவு எதிர்ப்பு ஏன் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர் இன்று தவெக சார்பில்
திறக்கப்பட இருந்த நீர் மோர் பந்தல் மேடை மிகவும் பிரம்மாண்டமாக பொதுமக்கள் ஏராளமானோர் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திறப்பு விழா நிகழ்வுக்கு முன்பே நீர்மோர் பந்தல் மேடை முழுவதுமாக அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

