தூத்துக்குடி,
ஏப்ரல், 24
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை சந்திப்பதற்கு
அனைத்துகட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியில் பா.ம..க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காயை நகர்த்தி வருகிறார்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று முன்தினம் இரவு சைவ அசைவ உணவுகளுடன் இரவு விருந்து அளித்தார்.
இதைத் தொடர்ந்து , கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .இன்று மாலை 4.30 மணி அளவில் அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்
அ.தி.மு.க. சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் போட்டிருப்பதை உறுதி செய்து எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஒவ்வொரு பூத்துக்கும் 45 வயதுக்குட்பட்ட 9 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட பொது கமிட்டி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில அளவிலான நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அனைத்து பூத்களிலும் மிகுந்த கவனத்தோடு செயல்படுவதற்கான அறிவுரைகள் அவர்கள் மூலமாக பூத் கமிட்டியின் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி இன்று பூத்தமிட்டி பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு சட்டமன்றதேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தார்
பூத் கமிட்டி நிர்வாகிகளை எப்படி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருப்ப தன் மூலம் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அவர் தீவிரமாக தயாராகி இருப்பது தெரியவந்து. அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான
சி.த செல்லப்பாண்டியன்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மறைமலைநகர், உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடத்தி சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு தனது கருத்துகளையும் பதிவு செய்தார்.

