========————
போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.;
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் காலமானார்.
போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில்,
இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது இதற்காக சிறப்பு வழிபாடு (திருப்பலி) நடத்தப் பட்டது.
வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப் பட்டது.

இந்த நிலையில்,
இன்று மாலை
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள பரிசுத்த பனிமய மாதா பேராலயத்தின் அதிபர் மற்றும் பங்கு தந்தை ஸ்டார்வின் பரிந்துரையின் பெயரில் கொடிக்கம்பத்தில் பாப்பரசர் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது
இதில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதத்தை சார்ந்தவர்களும், பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழக வெற்றி கழகம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் திரளான கட்சி நிர்வாகிகள், மகளிர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போப் பிரான்சிஸ் அவர்களின் படத்தை கையில் ஏந்தியவாறு
ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
பரிசுத்த பனிமய மாதா பேராலயத்தின் அதிபர் மற்றும் பங்கு தந்தை ஸ்டார்வின்
தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனால் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் வளாகம் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது.

