தூத்துக்குடி,ஏப்ரல்,24
தூத்துக்குடியில் திமுக,அதிமுக,உட்பட மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், தவெக வில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் இணைந்தனர்.
தமிழகத்தில் மாபெரும் மாற்று சக்தியாக, 2026 இல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையை விரும்பி, திராவிட கட்சிகள், தேசிய கட்சிகள் என பல்வேறு அமைப்புகளில் இருக்கும் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை ஐக்கியமாக்கி வருகின்றனர். அதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் திராவிட கட்சிகள், மற்றும் தேசிய கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்
அதுபோல் நேற்று தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து, திமுக அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய மாற்றுக் கட்சிகளில் இருந்து,
சுமார் 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வழிகாட்டுதலோடு, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.


இந்நிகழ்வில், அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் ஆகியோர் வசிக்கும் வார்டுகளை சேர்ந்த, திமுகவினரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர் என்று கூறப்படுகிறது. மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 100 க்கு ஏற்பட்டவர்களுக்கு
தமிழக வெற்றி கழகத்தின் துண்டுகளை போட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பேசுகையில் ; தளபதி விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் சிறப்பாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய தினம் நமது கட்சியில் இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து ஒற்றுமையுடன் கட்சி பணிகளை செய்து தளபதி விஜய் கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது பலத்தை நிரூபிக்கும் காலம் ஆகையால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார். தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக, திமுக, உள்ளிட்ட ஏராளமான கட்சிகளில் இருந்து விலகி தங்களை இணைத்து வருகின்றன.

