தூத்துக்குடி,
ஏப்ரல், 21
தூத்துக்குடி வளா்ந்து வளரும் தொழில் நகரமாக இருந்து வருகிறது. அதற்கேற்றாற்போல் தமிழக அரசு பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி பொதுமக்கள் நலன் காத்து வருகிறது. சட்டம் ஓழுங்கை பாதுகாக்கும் வகையில் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓரு சம்பவத்தால் பல கேமராக்கள் சேதமடைந்தன. இந்நிலையில்
மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அல்பட் ஜான் உத்தரவிற்கிணங்க டவுன் ஏஎஸ்பி மதன் வழிகாட்டுதலின் படி எப்சிஐ குடோன் பகுதியில் நடைபெற்ற பூமிபூஜையில் போக்குவரத்து காவல்ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் துவக்கி வைத்தாா்.

பின்னா் கூறுகையில் தூத்துக்குடி மாநகாில் முக்கியமான அனைத்து சாலை பகுதிகளிலும் 650 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது. இது வேறு எந்த தொடா்பிலும் இல்லாமல் தனி வழித்தடம் மூலம் 4 மாத காலத்தில் முழுமையாக
நிறைவு பெறும் இதற்கென்று தனி கன்டேரால் ரூம் அமைக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படும் அதில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் இலகு ரக கனரக வாகனங்கள் எவ்வளவு வந்து செல்கிறது என்பதையும் கணக்கீடப்படுகிறது. அதே போல் 3ம் மைல் தேசிய நெடுஞ்சாலை பாலம், முத்தையாபுரம் ரவுண்டானா, மாப்பிள்ளையூரணி விலக்கு, புதூர் பாண்டியாபுரம், உள்ளிட்ட 8 இடங்களில் இதன் கண்காணிப்பு இருக்கும் தொடர்ந்து எல்லா பகுதிகளுக்கும் விாிவுப்படுத்தப்பட்டு குற்றச்செயல்கள் நடக்காத வகையில் மக்கள் பாதுகாப்பு நலன் கருதி, செயல்படுத்தப்படும். 6 மாதத்தில் நல்ல மாற்றங்கள் இதன்மூலம் தொியவரும். என்று கூறினாா். இந்த நிகழ்ச்சியின் போது
உதவி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சண்முகபாலன், உள்ளிட்ட போக்குவரத்து காவலா்கள் பலர் உடனிருந்தனா்.

