தூத்துக்குடி ஏப்ரல் 21
முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் நிர்வாகிகள் சார்பில் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று (21.04.2025) நண்பகல் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்ததாவது :-
முத்துக்குளித்துறை பரத நலச் சங்க அலுவலக கட்டிடத்தின் அலுவலக வாடகைதாரர் உரிமை மீதான பிரச்சனையில், உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் கோட்டாட்சியர் அவர்களின் நீதிமன்றம் செயல்முறை ஆணை ( ந.க.ஆ .1 / BNSS.164 / 687 / 2025 நாள் 05.03.2025 ) – ன் படி நடக்காமலும், (07.04.2025) அன்று, தூத்துக்குடி தென் பாகம் காவல் ஆய்வாளர் அவர்கள், காவல் அறிவிப்பு வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு சார்பு செய்த பின்னரும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில், முத்துக்குளித்துறை பரத நலச் சங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்து, சட்டவிரோதமாக செயல்படுகிறவர்கள் மீது, கொடுக்கப்பட்ட புகாரின் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க முத்துக்குளித்துறை பரத நலச் சங்கம் கோரிக்கை விடுப்பதாக செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பின் போது முத்துக்குளித்துறை பரத நலச் சங்கத்தின் தலைவர் ஜான்சன், பொதுச் செயலாளர் கனகராஜ், பொருளாளர் பியோ கர்டோசா மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

