தூத்துக்குடி, ஏப்ரல் 20
பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இசக்கிராஜா தேவர் தலைமையில் பல்வேறு கோாிக்கைகளை வலியுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இசக்கிராஜா தேவர் தலைமை தாங்கி பேசுகையில் விருதுநகர் மாவட்டம் அர்ச்சனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் கோவிலை விட்டு இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக வெளியேற வேண்டும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அர்ச்சனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் கோவில் சிலையை உடைத்த கயவர்களை உடனடியாக கைது செய்யவும், நல்லதங்காள் கோவில் சிலை உடைக்கப்பட்டு இரண்டு மாத காலங்கள் ஆகியும் இதுவரை தமிழக காவல்துறையால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிடவும், தென் மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர் திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல புதிய தொழிற்சாலைகளை நிறுவி இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மத்திய மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும், ஏற்கனவே மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டொ்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறந்து வேலை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கும் இளைஞர்களுக்கும் மத்திய மாநில அரசுகள் நல்வழி காட்டவும், தமிழக அரசாணையின் அடிப்படையில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையினை தமிழக அரசு சிறப்பு அரசாணை அல்லது சிறப்பு சட்டம் இயற்றி திறந்திடவும் சுமார் 25,000 குடும்பத்தின் வாழ்வாதாரம் காத்திடவும், தாமிர ஆலையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது தொழில்நுட்ப மாறுபாடு செய்ய வேண்டும் எனில் அதனை முறையான வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறந்திடவும், குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விரைவில் மூன்று தாமிர உருக்காலைகள் நிறுவப்பட உள்ள நிலையில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறந்திட உடனடி நடவடிக்கை எடுக்கவும், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் தாமிரவிலை குறைவதுடன் அதைச் சார்ந்த சிறுகுறு தொழில் வளர்ச்சி அடைவதோடு விவசாய உரம் விளையும் குறையும். தாமிரம் இறக்குமதி என்ற தற்போதைய நிலை மாறி தாமிர ஏற்றுமதி அடைய வாய்ப்பு உள்ளது. அதை உருவாக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினாா்.



இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். பொதுமக்கள் பிரச்சனையை முன் நிறுத்தி பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அந்த நிகழ்வு ஒரு எழுச்சிமிகு கூட்டமாகவோ அல்லது போராட்டமாகவோ நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
தூத்துக்குடியில் தொழில்வளம் பெருகவும், 25,000 குடும்பத்தின் வாழ்வாதாரம் காத்திடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்னிறுத்தி நடத்திய ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய போராட்டமாக காட்சி அளித்தது…

