==================
தூத்துக்குடி,
ஏப்ரல் 18
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (18ம் தேதி) சிறப்பு ஆராதனை மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலங்கள் நடந்தது . இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளி ஆகும். இதனை துக்க வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இதனையொட்டி தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரம் ஆகும். புனித வாரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை புனித வெள்ளி ஆகும்.
இதனையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று சிறப்பு ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் வார்த்தை வழிபாடு நிகழ்வு நடந்தது இது காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற்றது அருட்பணியாளர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடு வசனங்களை கூறி மன்றாட்டு நடத்தினர் பின்னர் திருச்சிலுவை வழிபாடு நடந்தது தொடர்ந்து கிறிஸ்தவர்கள் திருச்சிலுவையை முத்தமிடும் நிகழ்வும், காணிக்கை செலுத்துதலும் நடந்தது இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் இந்த சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை ஊர்வலங்கள் நடைபெற்றன.
இதையொட்டி தூத்துக்குடி தூய பணிமயமாதா ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் இயேசு சிலுவை சுமப்பது போன்ற சொரூபம் ஆலயத்தை சுற்றி பவானியாக எடுத்துவரப்பட்டது. இந்த சிலுவைப்பாதை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பிறகு சிலுவைப் பாதை ஊர்வலத்தில் கலந்து கொண்டு, ஆலயத்தை விட்டு வெளியே வந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தை போக்கும் வகையிலும், அவர்களின் சோர்வை போக்கும் வகையிலும் அவர்களுக்கு நீர்மோர் தர்பூசணி குளிர்பானங்கள் வழங்க வேண்டுமென
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த வழிகாட்டுதல்படி, தூத்துக்குடி மாவட்ட
தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட
தவெக தொண்டர்கள்
ஒன்றிணைந்து
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்
தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஆணையை திறம்பட நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடியில் பெண் சிங்கமாக
பனிமய மாதா ஆலயம் முன்பு தனது தொண்டர்களோடு
இளைஞர் அணி நிர்வாகி கௌதம் உள்ளிட்ட தொண்டர்கள் புடை சூழ
ஆலயத்திலிருந்து வெளியே வரும் பக்தர்கள் சோர்வை போக்கும் வகையில்
அஜிதா ஆக்னல்
நீர் மோர், மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் வழங்கும் வரை இந்த சுட்டெரிக்கு வெயிலில் அவர் நின்று செய்து வந்த மனிதநேயமிக்க இந்த செயல்களை
கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் பார்த்து வெகுவாக பாராட்டினர்.

தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய்க்கும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மற்றும் அவருடன் இணைந்து மனிதநேயமிக்க செயல்களில் ஈடுபட்ட
தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன. திராவிட கட்சிகள் தூத்துக்குடியில் செய்யாத காரியங்களை புதிதாக துவங்கியுள்ள தமிழக வெற்றி கழக கட்சி தொண்டர்கள் சிறப்பாக செய்த இந்த சிறப்புமிக்க செயல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்படுகிறது.
தூத்துக்குடி தவெக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்
தற்போது தூத்துக்குடி மக்களின் எந்த ஒரு உரிமை பிரச்சனைக்கும் முதலில் நின்று குரல் கொடுத்து வருகிறார். புனித வெள்ளி அன்று மதுபானக்கூடங்களை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் குருவானவர்கள் தலைமையில் நடைபெற்ற போது அதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான
சி.த. செல்லப்பாண்டியன் மற்றும்
தவெக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் ஆகிய இருவரும்
மட்டுமே அரசியல் பிரமுகர்களாக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மக்கள் பிரச்சினைகள் மட்டுமின்றி மனிதநேயத்தோடு செயல்படும் அஜிதா ஆக்னல்
அதைத்தொடர்ந்து தஸ்நேவிஸ் பள்ளி அருகில் தமிழக வெற்றிக் கழகத்தின் கழக மகளிர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் மோர் பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் திரேஸ்புரம் பகுதியில் கழக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோரினை வழங்கினார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி விஜய்யால் தொடங்கப்பட்ட நாட்களில் இருந்து தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பல்வேறு தரப்பட்ட ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பள்ளி குழந்தைகளுக்கு கல்விக்கான உதவி, பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் என தொடர்ந்து பல செயல்களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் படையோடு இணைந்து l
தமிழக வெற்றி கழகம் தலைமை தெரிவிக்கும் உத்தரவை உடனடியாகவும் சிறப்பாகவும் செம்மையாக செய்து காட்டுவதில் அஜிதா ஆக்னல் சிறந்து விளங்குகிறார். இவரது தொடர் செயல்பாடுகளால்
கட்சி தலைமை இவரை “குட் புக்கில்” வைத்திருக்கிறார்களாம்,தற்போது
கிறிஸ்தவ மக்கள் மனம் குளிரும் வகையில் இவர் செய்த இந்த காரியம்
தூத்துக்குடி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும்
இருந்து பாராட்டுக்கள் குவிகிறது. அஜிதா ஆக்னல் தூத்துக்குடியில் பெண் சிங்கம் போல் செயல்பட்டு வருவது குறித்த தகவல் தமிழக வெற்றி கழகம் தலைமைக்கு தெரிய வந்துள்ளது. தற்போது புனித வெள்ளி அன்று தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில் சிறப்பு வழிபாடுக்கு வந்த மக்கள் அனைவரையும் மனம் குளிரும் வகையில் குளிர்பானங்கள் நீர்மோர் என மக்களுக்கு மனிதநேயத்தோடு அஜிதா அக்னல் செய்த இந்த நிகழ்வுகள் தமிழக வெற்றி கழகம் தலைமைக்கு தெரிய வந்து தலைமை அஜிதா ஆக்னல் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரையும் பாராட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. தமிழக வெற்றி கழகம் பெண் பொறுப்பாளர் தூத்துக்குடியில் இப்படி அசத்தி வருவது மாற்றுக் கட்சியினர் மத்தியில் சற்று கலக்கம் ஏற்பட்டு வருகிறது.
அதே சமயத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் இருந்து அஜிதா ஆக்னல் செயல்பாட்டுக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிக்கிறது.
செய்தி தொகுப்பு
K. கரிசல் முத்து

