அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராடவிட கழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணியின் சார்பில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முகமது ராஜா என்பவர் போட்டியிடுகிறார்.
முகமது ராஜா தென்காசி தொகுதியில் நன்கு பரிட்சையமானவர். தென்காசி தொகுதியை பொறுத்தவரையில் இஸ்லாமியர்களுக்கு எந்த கட்சியிலும் இதுவரை நடந்த தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக, எஸ்.டி.பி.ஐ, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்த வலுவான கூட்டணி சார்பாக தென்காசி தொகுதியில் அமமுக வேட்பாளர் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த முகமது ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் ஒரு சாதியினர் மட்டுமே அதிக பயன் அடையக்கூடிய வகையில் சட்டதிருத்த மசோதா நிறைவேற்றியதால், மற்ற சாதியினர் அதிமுக மீது கடும் அதிருப்திக்கு உள்ளாகினர். இதனால், அதிமுக-பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மீது அதிருப்தியில் இருக்கும் ஓட்டு வங்கிகளை ஒட்டுமொத்தமாக வளைக்க அமமுக கூட்டணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுரண்டை பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொகுதியில் உள்ள நீண்டகால பிரச்சனைகளை வெற்றி பெற்றவுடன்; 6 மாதத்தில் அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
தமிழகத்தின் எதிர்காலமே அமமுக தான் என்றும், இந்த தேர்தலில் அமமுகவே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும், என்று நம்பிக்கை தெரிவித்து திமுக முக்கிய நிர்வாகியான சுரண்டையைச் சார்ந்த திமுக மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் சபர்நிஷா மற்றும் திமுக மகளிரணியினர் பலர் அமமுகவில் இணைந்தார்.
தென்காசி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் முகமது ராஜா முன்னிலையில் திமுக மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் சபர்நிஷா உள்ளிட்ட மகளிரணியினர் அமமுகவில் இணைந்ததால், தென்காசி தொகுதி திமுக கட்சி வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திமுக மகளிரணியினர் வருகை மற்றும் மாற்றுக்கட்சியினர்கள் உட்பட பலதரப்பினர்களின் ஆதரவு பெருகி வருவதால் அமமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
செய்தி தொகுப்பு: ஜெ. அமல்ராஜ்

