தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதனையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சமூக ஆர்வலருமான, மக்கள் நீதி மைய வேட்பாளர் ராஜகுமார் தேவகோட்டை நகர் முழுவதும் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,அப்போது மக்களின் வீடுகளுக்கு சென்று டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,இந்த பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்
தேவகோட்டை கண்ணன்


