விளாத்திகுளம் தொகுதி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய கிராமங்களில், அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன் சூறாவளி பிரச்சாரம் மேற்க்கொண்டு பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விளாத்திகுளம் தொகுதி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ விளாத்திகுளம், சோலைமலையன்பட்டி, ஓ. லட்சுமி நாராயணபுரம், லெக்கம்பட்டி, இலந்தைகுளம், விருசம்பட்டி, மாமு நயினார்புரம், வி.வேடபட்டி, நெடுங்குளம், பல்லாகுளம், துவரந்தை, கன்னிமார்கூட்டம், தத்தனேரி, குமார சக்கனாபுரம், சங்கரநாயக்கன்பட்டி, மாதராசிபுரம், ரெட்டியபட்டி, அரியநாயகிபுரம்,
வீர காஞ்சிபுரம், ஊசி மேசியாபுரம், சூரங்குடி, கே.தங்கம்மாள்புரம், எம். சண்முகபுரம், மேல்மாந்தை, வி.ஓ.சி செவல், இ.வேலாயுதபுரம், கலைஞான புரம், துலுக்கன் குலம், வைப்பார் கீழவைப்பார், சிப்பிகுளம், குண்டப்பெருமாள்புரம், கல்லூரணி
உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில், வீதி வீதியாக சென்று, விளாத்திகுளம் சட்டப் பேரவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் உடனிருந்தனர்.


