நாம் இந்தியர் கட்சி
20
=================
தூத்துக்குடி ஏப்ரல் 15
வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நாம் இந்தியர் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 120 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கட்சி தலைவராகிய தான் சென்னையில் போட்டியிட உள்ளதாக
நாம் இந்தியர் கட்சி
கட்சியின் தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டி அளித்தார்.
தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள எபனேசர் மஹாலில் வைத்து நாம் இந்தியர் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி தலைமையில் கட்சியின்
பொதுக்குழு கூட்டம் நேற்று (14.04.2025) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த
நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி. ராஜா
பெரியசாமி தெரிவித்ததாவது
2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் இந்தியர் கட்சி கண்டிப்பாக போட்டியிடும் சுமார் 120 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதுபோல் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்றும் சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்சி ஆரம்பித்து கடந்த 7 வருடங்களாக நாம் இந்தியர் கட்சி படிப்படியாக வளர்ந்து வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் நாம் இந்தியர் கட்சி போட்டியிடும் என தெரிவித்த என்.பி. ராஜா பெரியசாமி தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
தமிழகத்தின் தற்போதைய தேர்தல் நிலை எப்படி உள்ளது என்றால், பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் வாக்காளர்களை சந்தோஷப்படுத்துவது தேர்தல் சமயங்களில் நடைபெற்று வருகிறது. தேர்தலில் ஆளுகிற கட்சியோடு கூட்டணி அமைத்து கொண்டால் தான் மக்களுக்கான திட்டங்களை தடையில்லாமல் கொண்டு போய் சேர்க்க முடியும் என்றார்.
தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணி அமைந்துள்ளது. இதுபோல விஜய் செல்வாக்கான ஒரு நடிகர் அவரும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். விஜய் தோல்வியே சந்திக்க தயாரானவரா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தோல்வியை சந்திக்க தயாரான அரசியல்வாதிகள் மட்டுமே தமிழகத்தில் நிலைக்க முடியும் என நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் நேரத்தில் எங்களை அணுகினால் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். ஒன்று அல்லது இரண்டு சீட்டுக்காக போய் நிற்கப் போவதுமில்லை என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
இக்கூட்டத்தில், நாம் இந்தியர் கட்சியின் மாநில செயலாளர் பொன்ராஜ், மாநில பொருளாளர் ஜெயகணேஷ் உள்ளிட்ட நாம் இந்தியர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

