============
தூத்துக்குடி,
ஏப்ரல், 15,
தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் பொதுச் செயலாளர் மில்லை தேவராஜ், மாநில பொருளாளர்
எம்.எஸ்.டி ரவிசேகர், மாநிலச் செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சாமுவேல்ராஜ், பொருளாளர் செல்வகுமார்,
சேர்வைக்காரன்மடம் கணேஷ் நாடார் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா நட்டாத்தி ஒன்றியம் குமார் நாடார் ஆரோக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து
நிர்வாகிகள் அனைவரும்
சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

