தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்குபதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் போலீஸ் பார்வையாளர் திரு. சப்யா சச்சி ராமன் மிஸ்ரா இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் M.Sc (Agri) ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தேர்தல் போலீஸ் பார்வையாளர் திரு. சப்யா சச்சி ராமன் மிஸ்ரா இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் M.Sc (Agri) ஆகியோர் தலைமையில் இன்று (21.03.2021) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சட்டம் ஒழுங்கு குறித்தும், பிணையில் விடமுடியாத பிடியாணைகள், துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தது, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்த பதிவு செய்யப்பட்ட வழக்குகள், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 சோதனைச் சாவடிகள் மற்றும் அதில் வாகன தணிக்கை நடைபெறுவது, துணை இராணுப்படையினரின் பணிகள் மற்றும் அவர்களின் தேவைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்றுப்பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 1523 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் பிரச்சனையில் ஈடுபடக்கூடியவர்கள் 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று உரிமம் பெற்ற 536 துப்பாக்கிகளில் விலக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கிகள் 84 தவிர அனைத்து துப்பாக்கிகளும் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தவிர இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை 42 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ.கா.ப, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் திரு. பொன்னரசு, கோவில்பட்டி திரு. கலைகதிரவன், ஸ்ரீவைகுண்டம் திரு. வெங்கடேசன், மணியாச்சி திரு. சங்கர், விளாத்திகுளம் திரு. பிரகாஷ், சாத்தான்குளம் திரு. காட்வின் ஜெகதீஷ் குமார், மாவட்ட குற்ற பிரிவு திரு. பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் திரு. பழனிகுமார், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு திரு. முருகவேல், ஆயுதப்படை திரு. கண்ணபிரான், துணை இராணுப்படை அதிகாரிகள், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

