கோவில்பட்டியில் பள்ளிக்கு கூடுதல் கட்டடத்திற்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் ரூ. 8 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் சி.எஸ்.ஆா். திட்டத்தின் கீழ் கோவில்பட்டி, வேலாயுதபுரம் ஈ.வே.அ. வள்ளிமுத்து உயா்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடத்திற்காக ரூ.8 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதற்கான காசோலையை, கோவில்பட்டி கிளை முதன்மை மேலாளா் செந்தில்குமாா், பள்ளிச் செயலா் வேல்முருகேசனிடம் நேற்று வழங்கினாா். அப்போது, நாடாா் மகாஜன சங்க துணைத் தலைவா் பிரபாகரன், பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் கிறிஸ்டோபா், பள்ளித் தலைமையாசிரியா் துரை, பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் மணிக்குமாா், ஆசிரியா் வினோத்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

