தூத்துக்குடி,மார்ச், 31
தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் தாயகம் டிரஸ்ட் & BMP ஏர்போர்ட் டவுன்ஷிப் மற்றும் RKM LAND PROMOTERS இணைந்து நடத்திய 17 ஆம் ஆண்டு மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
மகளிர் தின விழா நிகழ்ச்சிக்கு RKM LAND PROMOTERS ஜமீன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
தாயகம் டிரஸ்ட் இயக்குனர் ஜெயக்கனி விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார்.
மகளிர் தின விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நாட்டுப்புற பாடல்கள், ஒயிலாட்டம், கும்மியாட்டம், ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



சமூகநல அலுவலர் திலகவதி தூத்துக்குடி மாநகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் சரவணபாமா,
தேவ சகாய அருணி,மத்திய கூட்டுறவு வங்கி தலைமை கிளை மேலாளர் காசி கனி, பிரகாசபுரம் நகர கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் அஜிதா வின்சி, முத்தையாபுரம் ஜெயம் மருத்துவமனை மருத்துவர் இந்திரா, வழக்கறிஞர் ஆரோக்கியமேரி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக பட்டுக்கனி, கலைசித்ரா,, முருகேஷ்வரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில்
தமிழன்டா கலைக்குழு நிறுவனர் ஜெகஜீவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தமிழ் பாரம்பரிய கலாச்சாரம், பாரம்பரிய உணவு, மருத்துவம் ஆகியவை குறித்து சிறப்புரையாற்றினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு
பரிசுகளை
RKM LAND PROMOTERS எஸ் ஜமீன் கிருஷ்ணன் ஏற்பாட்டில்
தாயகம் டிரஸ்ட் இயக்குனர் ஜெயக்கனி விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார்,
முத்துப்பாண்டி, ராஜேந்திரன், பரிசுகள் வழங்கி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
விழா நிறைவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
RKM LAND PROMOTERS முத்துப்பாண்டி, ராஜேந்திரன், உஷா ஆகியோர் நன்றியுரையாற்றினர்.
தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் தாயகம் டிரஸ்ட் & BMP ஏர்போர்ட் டவுன்ஷிப் மற்றும் RKM LAND PROMOTERS இணைந்து நடத்திய மகளிர் தினவிழாவில் சுமார் 2,000 க்கு மேற்பட்ட மகளிர்கள் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு துறை அதிகாரிகள் மகளிர்கள் சுயமாக தொழில் முனைவதற்கு அரசுகள் செய்து வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமாக தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கு முன்பு யாரும் நடத்திடா வகையில் 17 ஆம் ஆண்டு மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து மகளிர்களும் புத்துணர்ச்சியோடு கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

