தூத்துக்குடி,
மார்ச், 26
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கராத்தே செல்வின் 28 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சியினர் வணிகர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவன தலைவர் கராத்தே செல்வின் நாடார் 28-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் கல்லறை தோட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் வருகை தந்து கராத்தே செல்வின் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். அதுபோல பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன்
தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவதற்காக தூத்துக்குடி வி.இ ரோட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பெரிய மார்க்கெட் வளாகத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் நெல்லையை நோக்கி கராத்தே செல்வின் நினைவிடத்திற்கு வந்தனர்.






பின்னர்
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன்
கராத்தே செல்வின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளான பொதுச் செயலாளர்
மில்லை தேவராஜ், மாநிலச் செயலாளர் N. சண்முகவேல், எம்.கணேசன் மாநில துணைத்தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வி நிறுவனச் சேர்மன் மில்லை ஸ்டீபன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் J. சாமுவேல் ராஜ், மாவட்டத் தலைவர் தூத்துக்குடி மாவட்டம் J. வேல்முருகன் மாவட்ட பொருளாளர் M. செல்வகுமார், நாகர்கோவில் B.கணேசன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் P. முனீஸ்வரன் வடக்கு மாவட்ட செயலாளர், P. முனியசாமி விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர், T. சக்தி நாராயணன் மாவட்ட துணை செயலாளர், சிவா மாவட்ட இளைஞர் அணி செயலாளர் R. அழகு துரை மற்றும் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க அமைப்பின், நிர்வாகிகள், இளைஞர்கள், ஏராளமானோர் திரண்டு வந்து கராத்தே செல்வின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இதையொட்டி நெல்லை- நாகர்கோவில் மெயின் ரோடு மற்றும் கல்லறை தோட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன்
ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கராத்தே செல்வின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்..

