தூத்துக்குடி,மார்ச்,20
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தாா்.
இதனையடுத்து தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகர பகுதியான முத்தையாபுரம்,
எஸ். எஸ். மாணிக்கபுரம், அம்பேத்கர் நகர் பகுதி,என ஒவ்வொரு இடங்களிலும் தலா 2000 பேர்களுக்கு
கிரைண்டர், தையல் இயந்திரம், , குடம் வேஷ்டி சேலை வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை அள்ளி வழங்கி வருகிறார் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள். இந்நிலையில் நேற்று(19/03/25) மாலை
5 வது கட்டமாக சுமார் 1500 பேருக்கு மெகா நலத்திட்டங்கள் வழங்கும் விழா விழா
கழக வர்த்தகஅணி செயலாளரும், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் ஏற்ப்பாட்டில், தூத்துக்குடி அபிநயா திருமண மண்டபத்தில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது.இதில்மாலை 5 மணியளவில் திருவனந்தபுரம் மிதுனா மாரியப்பன் வழங்கும் தெய்வத்தாய் அம்மா கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்ஜிஆர் ஜெயலலிதா, மேடம் அணிந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது



பின்னர் 1500 நபர்களுக்கு வேஷ்டி, சேலை, எவர்சில்வர் குடம்,மீன்வட்டா, தையல் இயந்திரம்,கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட்டன. இதனை ஒவ்வொரு நபர்களுக்கும் செல்லப்பாண்டியன் தனித்தனியாக வழங்கி சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து
முன்னாள் அமைச்சர் சி.த செல்லபாண்டியன் பேசுகையில் அதிமுகவை தொடங்கி எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் எல்லாம் நன்மை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினாா். அவரது மறைவிற்கு பிறகு அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதா பொதுச்செயலாளராக பணியாற்றி இந்திய அரசியலில் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக 5 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்து எழை எளிய மக்கள் துயர் போக்க என்னற்ற நலத்திட்டங்களை தீட்டி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து அவர் வழியிலேயே முதலமைச்சராக இருந்த காலம் வரை மக்கள் நலன்கருதி பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மடிக்கணினி சைக்கிள் பெண்கள் திருமணத்திற்கு தாலிக்குதங்கம் பணம் மிக்ஸி மின்விசிறி போன்ற பல்வேறு நல்லத்திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் நலன் கருதி வாழ்ந்தாா். மீனவ மக்கள் எம்ஜிஆர் மீதும் அதிமுக மீதும் பற்றுள்ளவா்கள் ஜெ மறைவிற்கு பின் நான்கரை ஆண்டுகாலம் ஜெயலலிதா வழியில் மக்கள் ஆட்சி நடத்தினாா் எடப்பாடியாா்
ஏழைகளின் பசி தீர்க்க அம்மா உணவகம்
குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க அம்மா மருந்தகம்,
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்,
மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற மகத்தான திட்டங்கள் தந்த
முன்னாள் முதல்வர்
எடப்பாடியாரின் பொற்கால ஆட்சி மீண்டும் தொடர அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் இப்போதே தயாராகி கொள்ளுங்கள் என்று பேசினார்.
இந்த விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்,வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்,
முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் முன்னாள் அகஸ்டின்,
முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ்,
முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம்,மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன்,
தூத்துக்குடி அதிமுக 46 வட்ட செயலாளர், கிழக்கு பகுதி தலைவர், கிழக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், தென்பாண்டியர் புல்டன் ஜெசின்,
முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம்,முன்னாள் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சி.த.செ.ராஜாசிங்,
ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் குமார்,முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர்*
என்.சிவசுப்பிரமணியன்,வட்ட செயலாளர்கள்
லயன்ஸ் டவுன் சகாயராஜ்,
ஜெனோபர்,மில்லர் ஆர.எல். ராஜா, அருண்குமார்,
அந்தோனி ராஜ்,மாவட்ட பிரதிநிதிகள்,
அந்தோனி சேவியர்,
செல்லப்பா,ஜேடியமா,தூத்துக்குடி அம்மா பேரவை கிழக்கு பகுதி செயலாளர் அண்டோ,முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன்,
மின்சார பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன்,
தெர்மல் திட்ட பொருளாளர் ரவிக்குமார்,
பேச்சாளர்கள்
ஹெய்னஸ்,
அனல் ராஜசேகர்,
உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி,
முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்திரா செல்லப்பா,
போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்,
டெரன்ஸ்,பெலிக்ஸ்,
சங்கர்,சகாயராஜ்
ராஜேந்திரன்,பேச்சியப்பன்,முருகன்
சிறுபான்மை பிரிவு
பிரபாகரன்,அனிஸ்டஸ்அபுதாஹிர்மற்றும்..ஸ்டாலின் சார்லஸ் நெப்போலியன் பாபநாசம்,
அந்தோனி ராஜ்,
துறைமுகம் ராஜ்குமார்,மகராஜன்
ஜேசுராஜ்,தளவாய் புரம் காசி,ஆறுமுகம்,
சித்திரை வேல்,
மணிகண்டன்,
டெகரேஷன் நயினார்,சுப்புராஜ்,
ஜோதிகா ,
ஆபிரகாம்,
முனியசாமி
ராஜசேகர்வெங்கடாசலம்,பொன்ராஜ்
ஆறுமுகம்,
மகளிர் அணியினர்
பெருமாள் தாய்,
சாய் சுதா,முத்துலெட்சுமி,
ரெக்ஸி,அமைப்பு சாரா ஓட்டுநர் அணி.,நடராஜன்
அரசு,மற்றும்
திரளான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ் நியூஸ்
==============
ஜெ 77 வது பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் பகுதியில் தற்போது ஐந்தாவது கட்டமாக சுமார் 10,000 ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், கிரைண்டர், குடம், வேஷ்டி சேலை, பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை அதிமுக மாநில வர்த்தக அணி சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான
சி. த. செல்லப்பாண்டியன் அள்ளி வழங்கி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி இருந்த காலகட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள 60 வார்டுகளுக்கும் நேரில் சென்று அரிசி, பலசரக்கு சாமான்கள், காய்கறிகள், என வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து சுமார் 50 தினங்களுக்கு மேலாக நாள்தோறும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக தேடி வந்து நிவாரண பொருட்களை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெ. பிறந்தநாள் முன்னிட்டு இதுவரை 5 கட்டங்களாக சுமார் 10000, நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளார். இதனால் தூத்துக்குடி அதிமுக வினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.. தமிழக அளவில் அதிமுக வினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் அமைச்சர்
சி.த. செல்லப்பாண்டியனு க்கு நலத்திட்ட நாயகன் என்ற பெயர் தொடர்ந்து விளங்கி வருகிறது.

