• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலை பணிகளையும் மே மாதத்திற்குள் முழுமையாக முடித்து தரப்படும் :  மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!

policeseithitv by policeseithitv
March 19, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள  அனைத்து சாலை பணிகளையும்  மே மாதத்திற்குள் முழுமையாக முடித்து தரப்படும் :   மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

 

தூத்துக்குடி, மார்ச், 19

கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் பழைய நகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். ஆணையர் மதுபாலன் மண்டலத்தலைவர் கலைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனர்.

முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி  பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர். அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஓரு புறம் நடந்து வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 8 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அதனடிப்படையில் தொடர்ந்து முகாம்கள் நடைபெறுகிறது. இங்கு ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களின் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் முகவாளி மாற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைகளுக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அதனடிப்படையில் இந்த முகாமில் ஒவ்வோர் மனுக்களையும் முறையாக பதிவு செய்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மே மாதத்திற்குள் அனைத்து சாலைகளும் செய்ந்து தரப்படும். இந்த பகுதிக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை ரோச் பூங்கா உள்ளது. அதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் பொருட்டாக நடைபயிற்சி உள்ளிட்டவைகளை பொதுமக்கள் மேற்கொண்டு மகிழ்ச்சியாக பொழுது போக்கு நிகழ்வுகளை களித்து வருகின்றன. பல இடங்கள் ஆணையா் பெயாிலும் சில இடங்கள் ஆட்சித்தலைவர் பெயாிலும் அரசு இடங்கள் இருப்பதுண்டு பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காலிஇடத்தை கலெக்டர் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து கடிதம் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் அந்த இடத்தில் எதிர்கால தலைமுறையினருக்கேற்ப கோடைகாலத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டு காலி அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஏதுவாக மக்கள் பயன்பாட்டிற்கு வழித்தடமும் அமைத்து கொடுக்கப்படும் மாநகரின் மையப்பகுதியில் ஆன்மீக தலம் நிறைந்த பகுதியில் உள்ள தெப்பக்குளம் மிகவும் பழமையானது கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் அங்கு வந்து செல்வதுண்டு அதை மேலும் அழகு கூட்டும் வகையில் பேவர் பிளாக் பதிக்கப்பட்ட வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் 1 கேட் பகுதி தேவாலயம் எதியில் உள்ள அந்த சிறிய பூங்கா சற்று மேம்படுத்தப்பட்டு அதன் அருகில் மற்றொரு அரசு இடத்தில் ஓரு பூங்கா அமைக்கப்படும். மாநகராட்சியை பொறுத்தவரை 206 பூங்காக்கள்  இருக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது. பல தன்மை இடங்களில்க்கேற்ப கட்டமைப்புகளுடன் உருவாக்கப்படுகிறது. மாவட்ட விளையாட்டு மைதானம் போன்று மாநகராட்சி பகுதிகளிலும் அதுபோன்று அமைவதற்கு உள்ள வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். புதிய கால்வாய்கள் தார்சாலை என அனைத்து பகுதிக்கும் பாரபட்சமின்றி வழங்கியுள்ளோம் முழுமையாக மே மாதத்தில் அனைத்தும் நிறைவு பெறும். மக்களின் மகிழ்ச்சிதான் எங்களுக்கு பெருமை அளிக்க கூடியதாக அமையும் அந்த வகையில் தான் நாங்களும் பணியாற்றி வருகிறோம். என்று பேசினாா்.

பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் மதுபாலன், ஆகியோவிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுடன் தொிவித்த கருத்துக்களை கனிவுடன் கேட்டறிந்து சம்பந்த பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை வழங்குவதற்கான விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். என்று உத்தரவிட்டேன். பின்னா் பிறப்பு இறப்பு பெயர் மாற்றம் முகவாிமாற்றம் என 5 பேருக்கு உடனடியாக சான்றுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் இணை ஆணையர் சரவணக்குமாா், உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், இர்வின் ெஜபராஜ், நகாநல அலுவலர் அரவிந்த்ஜோதி, சுகாதார ஆய்வாளர் ெநடுமாறன். இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அமல்ராஜ், குழாய் ஆய்வாளர் மாரியப்பன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் தனலட்சுமி, மரிய கீதா ராமுஅம்மாள், பேபி ஏஞ்சலின், சரண்யா, மகேஸ்வரி, எடின்டா, ரெக்ஸ்லின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா, ஜேஸ்பா, மேயரின்  நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, முன்னாள் கவுன்சிலர் மயிலாபரணம், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாக்ஸ்: பொதுமக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கிழக்கு மண்டலத்தில் மாநகராட்சி நிர்வாகம் மீது நம்பிக்கை வைத்து அதிக அளவில் கோவை மனு வழங்கினர் அவர்களோடு இணைந்து மாமன்ற உறுப்பினர்களும் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு வழங்கினர். மதிமுக சார்பில் மகாராஜன் பொன்ராஜ் ஆகியோர் மாநகராட்சி பகுதியில் தமிழ் எழுத்துக்களுடன் பல்வேறு விளம்பர பாடல்கள் முழுமையாக வைக்க வேண்டும். சில இடங்களில் காட்சி பொருளாக இருக்கும் விளம்பரம் இல்லாத பதாகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயிக்கை மனு வழங்கினர்.

Previous Post

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் முன்னிட்டு 72 திமுக முன்னோடிகளின் வீட்டுக்கே சென்று மிதிவண்டி வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி!!

Next Post

ஜெயலலிதா 77 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் 5 வது கட்டமாக 1500 ஏழை, எளிய, மக்களுக்கு கிரைண்டர், தையல் இயந்திரம், , வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை அள்ளி வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்..

Next Post
ஜெயலலிதா 77 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில்  5 வது கட்டமாக 1500 ஏழை, எளிய, மக்களுக்கு கிரைண்டர், தையல் இயந்திரம், , வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை அள்ளி வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்..

ஜெயலலிதா 77 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் 5 வது கட்டமாக 1500 ஏழை, எளிய, மக்களுக்கு கிரைண்டர், தையல் இயந்திரம், , வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை அள்ளி வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In