முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
72-வது பிறந்தநாள் முன்னிட்டு 72 திமுக முன்னோடிகளின் வீட்டுக்கே சென்று மிதிவண்டி வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த
மேயர் ஜெகன் பெரியசாமி!!
===============
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் வெகு சிறப்பாக நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடப்படுகின்றது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 72 திமுக முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு மிதி வண்டிகள் வழங்க திட்டமிட்டார். அதன்படி திமுக முன்னோடிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்,,வகையில் அவர்களின் வீட்டுக்கே நேரில் சென்று மிதி வண்டிகளை வழங்கினார் மேயர் ஜெகன் பெரியசாமி .
20 வது வார்டை சேர்ந்த செல்லதுரை, பட்டுவேதமுத்து, விஜயகுமார், கார்த்திகேயன், மற்றும் 11வது வார்டு கவுன்சிலர் தெய்வேந்திரன், வட்ட கழக பிரதிநிதி சுயம்புலிங்கம், முத்து ,மாரியப்பன், சேவியர், 5 வது வார்டை சேர்ந்த முரளிகிருஷ்ணா, உள்ளிட்ட திமுக முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு அவர்களது வீடுகள் தேடி சென்று மிதி வண்டிகள் மேயர் வழங்கினார். உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்ட கழக செயலாளருமான இரவீந்திரன் தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, வட்ட கழக செயளாலர் முனியசாமி, தெய்வேந்திரன் (எ) ராஜா, வட்ட கழக பிரதிநிதிகள் அருணகிரி,,.பேச்சிமுத்து கழக நிர்வாகிகள் அற்புதராஜ், பழனிவேல் முருகன் பாலசுப்பிரமணி, உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
