புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி தமிழக அரசு ஆணை வெளியிட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சட்டமன்றத்தில் வலியுறுத்தி
நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் உறுதி: கிறிஸ்தவ அமைப்புகள் மகிழ்ச்சி!!!
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளி தினத்தன்று டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.
புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் முழு நோன்பு இருந்து சிறப்பு பிரார்த்தனையும் வழிபாடு செய்வது வழக்கம் இதையொட்டி சிலுவையை சுமந்தவாறு உள்ள இயேசுவின் உருவச்சிலையை கிறிஸ்தவர்கள் ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று மனம் உருகி பிரார்த்தனை செய்யும் நாளாக புனித வெள்ளி விளங்குகிறது..
அன்றைய தினத்தில்
டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என
மறை மாவட்ட அனைத்து மதுவிலக்கு சபைகளின் ஒருங்கிணைப்பாளர் ரஸ்டன் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான,
சி. த செல்லப்பாண்டியன் அவர்களை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியிடம்
பரிந்துரைக்க
வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நிச்சயமாக சென்னை சென்று தங்களது கோரிக்கை மனுவை முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்து, தமிழக அரசு இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தவும், இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழியாக ஆதரவு அளிப்பதற்கு முன்னால் முதலர்வரிடம் பரிந்துரைப்பதாகவும் உறுதி அளித்தார்.
சந்திப்பின் போது தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபைகளின் தலைவர் ரூஸ்வெல்ட், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்ட மதுவிலக்கு சபைகளின் இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னாள் அமைச்சர் சி. த செல்லப்பாண்டியன் கிறிஸ்தவ மக்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் அரசு கவனத்திற்கு எடுத்து சென்று புனித வெள்ளி அன்று மதுபான கடைகள் மூடுவதற்கு அனுமதி பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள் . இதில் தமிழக அரசு நிலைப்பாடு என்ன?? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்….

