• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்செந்தூர் மாசித் திருவிழா : பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா!! 

policeseithitv by policeseithitv
March 10, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்செந்தூர் மாசித் திருவிழா : பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா!! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி ஷண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதி உலா நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

விழாவில் 8-ம்திருவிழாவான நேற்று திருக்கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

 

மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நாளை (12-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

 

11-ம்திருவிழாவான (13-ந் தேதி) தெப்ப திருவிழா நடக்கிறது. 12-ம்திருவிழாவான (14-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 

செய்தி தொகுப்பு சுந்தர்..

Previous Post

ஜெயலலிதா 77வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில்  4 வது நாளாக 1200 ஏழை, எளிய, மக்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

Next Post

தூத்துக்குடி பிரஸ் கிளப் கோரிக்கையை ஏற்று விமான நிலையத்தில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதற்கு மிக பிரம்மாண்டமாக மைக் ஸ்டான்ட் அமைத்துக் கொடுத்த பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷ் .: பாஜக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்…

Next Post
தூத்துக்குடி பிரஸ் கிளப் கோரிக்கையை ஏற்று  விமான நிலையத்தில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதற்கு மிக பிரம்மாண்டமாக மைக் ஸ்டான்ட் அமைத்துக் கொடுத்த பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷ் .: பாஜக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்…

தூத்துக்குடி பிரஸ் கிளப் கோரிக்கையை ஏற்று விமான நிலையத்தில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் பேட்டி எடுப்பதற்கு மிக பிரம்மாண்டமாக மைக் ஸ்டான்ட் அமைத்துக் கொடுத்த பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷ் .: பாஜக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்...

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In