============
தமிழக அரசும், உச்ச நீதிமன்றமும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து கடந்த 7 வருடங்களாக மூடி இருக்கும் நிலையில் ஆலையை திறக்க வேண்டும் என தற்போது சிலர் போராடுவது தூத்துக்குடி பொதுமக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் விதமான உள்நோக்கம் உள்ளதாக தெரிய வருகிறது. ஆகவே ஸ்டெர்லைட் விவகாரத்தை முன்னிறுத்தி நடைபெறும் அனைத்து கூட்டங்களையும் மேற்கண்ட அமைப்புகளையும் தமிழக அரசும் காவல்துறையும் உளவுத்துறையும் தீவிரமாக கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என் ஆர் தனபாலன் ஆணைக்கிணங்க அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் தனது அறிக்கையில் அரசுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற இருந்த
ஸ்டெர்லைட் ஆதரவு
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்று இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வாங்க உள்ளதாகவும்
தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நல சங்கம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்த உள்ளதாக ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் மற்றும் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும் கதிர்வேல் மகன் கே.பெருமாள்சாமி அதிரடியாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காக பேரணியும் நடத்த வேண்டாம், அதுபோல் நிரந்தரமாக மூடக்கோரியும் பேரணியும் நடத்த வேண்டாம் . ஸ்டெர்லைட் விவகாரத்தில் சில அமைப்புகள் அமைதியாக இருந்தாலே போதும் என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெர்லைட் விவகாரத்தில்
பேரணியால் 14 உயிர்களை இழந்த தூத்துக்குடி மக்களின் வேதனைக்கு மருந்து போடும் வகையில் நீதிமன்றம், மற்றும் தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு கட்டுப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக அமைதி பூங்காவாக விளங்கி வரும் தூத்துக்குடியில் தற்போது புதிதாக கிளம்பி வரும் பேரணிகள் ஆர்ப்பாட்டம் போன்ற விஷயங்களில் தமிழக அரசு மற்றும் உளவுத்துறை விழிப்புடன் கண்காணிப்புகளில் ஈடுபட்டு தூத்துக்குடி மக்களின் நிம்மதி பெரு மூச்சுக்கு உத்தரவாதம் அளிக்க பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர் அதுபோல் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பிலும் தமிழக அரசுக்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்,மாவட்ட காவல்துறை ஆகியவை
பொது மக்களின் அமைதியான சூழ்நிலையை உருவாக்கிடும் வகையில்
நல்ல ஒரு தீர்வுக்கு வழி வகுக்க வேண்டுமென பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர்
எஸ் பி மாரியப்பன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

