• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் கையகப்படுத்திய 72 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு மீட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!

policeseithitv by policeseithitv
February 1, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் கையகப்படுத்திய  72 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு மீட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் கையகப்படுத்திய

72 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு மீட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!

========

 

மதுரை: ஸ்பிக் நிறுவனம் கையகப்படுத்திய 72 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு மீட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்பிக் உர தயாரிப்பு நிறுவனத்துக்காக 1971-ல் 421 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டது. முள்ளக்காடு, கோரம்பள்ளம் ஆகிய கிராம பகுதிகளில் 421 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. 810 ஏக்கர் தனியாரிடம் இருந்தும் வாங்கப்பட்டன; அங்கு உரம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டு செயல்பட்டது.

மேலும் பல ஏக்கர் நிலங்களை ஸ்பிக் உர நிறுவனத்துக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். 1981-ம் ஆண்டில் 30.40 ஏக்கர் நிலத்தை தனியார் கெமிக்கல் நிறுவனத்துக்கு ஸ்பிக் உர நிறுவனம் வழங்கியது. ஸ்பிக் நிறுவனத்தால் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட 663 ஏக்கரை விவசாய பயன்பாட்டிலிருந்து விலக்களித்து 2002-ல் அரசாணை வெளியிடப்பட்டது. நிலங்களை ஆலைக்கு பயன்படுத்துவதில் விலக்கு அளிக்க மறுத்தும், அதை மீண்டும் அரசுக்கு மாற்றியும் 2007-ல் உத்தரவிடப்பட்டது.

 

நிலத்தை மீண்டும் அரசுக்கு மாற்றி திருநெல்வேலி நில நிர்வாக ஆணையர் 2007-ம் ஆண்டில் உத்தரவிட்டார். உத்தரவுக்கு எதிராக ஸ்பிக் உர நிறுவனம், கெமிக்கல் நிறுவனம் தனித்தனியாக வேளாண் நில தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுக்கள் 2014-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யும்படி நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நிலங்களை சட்ட அனுமதியின்றி மனுதாரர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்; அதை அரசு உடனே மீட்க வேண்டும் என கூறிய நீதிபதி, மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலை நிறுவனத்திடம் இருந்து 72 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் இணைந்து

உயர்நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுக்கும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்..

Previous Post

கல்வித்துறையும் மருத்துவத்துறையும் முதலமைச்சருக்கு இருகண்கள் தூத்துக்குடி பள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

Next Post

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை : அயலக அணி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு!!

Next Post
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை : அயலக அணி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு!!

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை : அயலக அணி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In