• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை : அயலக அணி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு!!

policeseithitv by policeseithitv
February 1, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை : அயலக அணி சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

மண்டபம், பிப்.1

 

மண்டபம் பேரூராட்சி தலைவர் இல்ல திருமண நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தி வைப்பதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை மண்டபம் பகுதிக்கு தமிழகத் துணை முதல்வர் வருகை தரவுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜாவின் மகன் தில்லை ராஜ்குமார் திருமணம் நிகழ்ச்சி நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில், மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி குஞ்சார் வலசை பகுதியில் அமைந்துள்ள ராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த திருமணம் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தி வைப்பதற்காக திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை ராமநாதபுரம் வருகை தந்தார். இதனையொட்டி திருமண நிகழ்ச்சியில் பிரமாண்டமான வரவேற்பு அளிப்பதற்காக பேரூராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.அதற்கு முன்னதாக இன்று மாலை மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராமநாதபுரம் வருகை தரும் துணை முதல்வரை, ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனுர் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கும், திருமணம் நடைபெற உள்ள வளாகத்தையும் பார்வையிட்டு, ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதுபோல் ராமநாதபுரம் மாவட்ட திமுக ஒவ்வொரு அணிகள் சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது

அதன்படி நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கு இன்று வருகை தந்துள்ள துணை முதல்வர் மு க ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்டம் எல்லையான

பார்த்திபனுர் பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் அயலக அணி மாவட்ட அமைப்பாளர், பன்னீர்செல்வம், மாவட்டத் துணை அமைப்பாளர் முன்னாள் எஸ்பி பட்டணம் ஊராட்சி மன்றத் தலைவர் சகுபர் சாதிக்,, ஆகியோர் தலைமையில் அயலக அணி துணை அமைப்பாளர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள்,புல்லுர் திமுக பிரதிநிதி ராமநாதபுரம் சதீஷ்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தார்கள். இதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு பங்குபெறும் துணை முதல்வருக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்..

Previous Post

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் கையகப்படுத்திய 72 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு மீட்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!

Next Post

மதுவிலக்கு போலீசார் என்று கூறி கொடைக்கானலில் பொதுமக்களிடம் கைவரிசை காட்டிய போலி எஸ்.ஐ கைது: நிஜ போலீஸிடம் சிக்கியது எப்படி???

Next Post
மதுவிலக்கு போலீசார் என்று கூறி கொடைக்கானலில் பொதுமக்களிடம் கைவரிசை காட்டிய போலி எஸ்.ஐ கைது: நிஜ போலீஸிடம் சிக்கியது எப்படி???

மதுவிலக்கு போலீசார் என்று கூறி கொடைக்கானலில் பொதுமக்களிடம் கைவரிசை காட்டிய போலி எஸ்.ஐ கைது: நிஜ போலீஸிடம் சிக்கியது எப்படி???

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In