தூத்துக்குடி, ஜன,16
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 108-ஆவது பிறந்த நாள் விழா முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர்
அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த செல்லப்பாண்டியன் தலைமையில் பல்வேறு இடங்களில்
எம்ஜிஆர் திருவுருவபடம் மற்றும்
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
நாளை 17/01/2025
காலை 9.30 மணியளவில்
அண்ணா நகர் 7 வது தெரு டூவிபுரம் சந்திப்பிலும் அதனைத் தொடர்ந்து
மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என் சிவசுப்பிரமணியன் ஏற்பாட்டில்
அண்ணா நகர் 12 வது தெரு சந்திப்பிலும்,மேலும்
அண்ணா நகர் ஓடை மெயின்ரோட்டில்
அதிமுக மகளிர் அணி முத்துலெட்சுமி ஏற்பாட்டிலும்
பழைய மாநகராட்சி முன்பு உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கும் அதனைத் தொடர்ந்து
திரேஸ்புரம் சந்திப்பில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங் மற்றும் வட்ட செயலாளர் ஜெனோபர் ஆகியோர் ஏற்பாட்டிலும்
அம்பேத்கர் நகரில் உள்ள தலைவர் சிலைக்கு
வட்ட செயலாளர் அந்தோனி ஸ்டாலின் ஏற்பாட்டிலும்
கோயில்பிள்ளை விளையில் இளைஞர் பாசறை வட்ட செயலாளர் பாக்யராஜ் ஏற்பாட்டிலும்.
புதியம்புத்தூர் மெயின் பஜாரிலும்,
முத்தையாபுரம் கழக முதுபெரும் நிர்வாகி குருசாமி அவர்கள் ஏற்பாட்டிலும், அதுபோல்
இரவு 7 மணிக்கு
முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அகஸ்டின் Ex.MC ஏற்பாட்டிலும் நடைபெறுகிறது.
பாரதரத்னா முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கும் படத்திற்கும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு நாளை தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிமுக நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சி த. செல்லப்பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

