=========
தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி 19வது வட்ட திமுக சார்பில் முதலாம் ஆண்டு தமிழ்புத்தாண்டு பொங்கல் விளையாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மகிழ்ச்சிபுரம் விநாயகர் கோவில் அருகில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னிலை வகித்தாா். மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், வரவேற்புரையாற்றினாா். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பயனாளிகளுக்கும் தையல்மிஷின்,
3 சக்கர சைக்கிள் சேலை வேஷ்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் சுமார் 500 பேருக்கு வழங்கி வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் “ கடந்த ஆண்டு பெய்த கனமழையால் இந்த பகுதி எந்த அளவிற்கு பாதித்தது. என்பதை உணர்ந்து தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இரண்டு படகுகள் மூலம் மக்களை மீட்டதும் உதவிகளை செய்ததும் நினைத்து பார்க்கிறேன். காரணம் அதனால் பொங்கல் விழா கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது எல்லோரும் இறைவனுடைய அருளாசியால் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியுள்ளோம் இந்த வாா்டு பகுதியை சேர்ந்த மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமாா் என்ற செல்வினும், கவுன்சிலர் டாக்டர் சோமசுந்தாியும், மக்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனா்.


தமிழ் மொழிக்கும், தமிழா்களின் வளர்ச்சிக்கும், தடையாகவும் இருந்து கொண்டு பலர் பணியாற்றுகின்றனர். அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. வேலைவாய்ப்பு மகளிா் உாிமைத்தொகை புதுமைப்பெண் தமிழ்புதல்வன் என எல்லா வகையிலும் சாதனைகள் தொடர்கின்றன. இதையெல்லம் பொறுக்க முடியாமல் சிலர் உள்ளனர். எதிர்கட்சிகள் குறைகளை சொல்லமுடியவில்லை. நாங்கள் இருக்கிறோம் என்ற இருப்பிடத்தை காட்டுவதற்கு குறை சொல்கின்றனர். மக்களாகிய நீங்கள் திமுக ஆட்சியில் எவ்வளவு சாதனை செய்துள்ளோம் என்பதை அறிவீர்கள் உாிமைத்தொகை விடுபட்டவர்களுக்கும் முறைப்படுத்தி வழங்கப்படும் இந்த அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசினாா்.
விழாவில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், ெதாண்டரணி துணை அமைப்பாளர் மணி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் நைஸ்பரமசிவம், கவுன்சிலர்கள் பொன்னப்பன், கனகராஜ், வட்டச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, பாலகுருசாமி, சுரேஷ், வார்டு நிர்வாகிகள் மேகநாதன், ஜெபஸ்தியான், அமிா்தலிங்கம், சுடலைமணி, ராஜா, முனியசாமி, தர்மர், மாாிமுத்து, சீனிமுகம்மது, பாலன், பாஸ்கா், ஹாிராம், சந்திரமோகன், திருமலைகுமார், சோமு, கண்ணன், கோட்டைமணி, ராஜசேகா், ராஜன், முருகன், வெங்கடேஷ், பிரபாகரன், ஜெய்கணேஷ், ராஜேஷ், முகேஷ், முத்துகுமாா், சின்னத்துரை, சதிஷ், சக்தி, ஹாிவிக்ணேஷ், தனலட்சுமி, பாத்திமா, பாரதி, கவுன்சிலர் சோமசுந்தாி,பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவகுமாா் என்ற செல்வின் செய்திருந்தாா். வட்டச்செயலாளர் பத்மாவதி நன்றியுரையாற்றினார்.

