=============
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி நகர
தமிழக வெற்றி கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி முருகன் தியேட்டர் அருகில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகி ஆனந்தகுமார் சேலை வழங்கினார். விழாவில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

