தைப்பொங்கல் திருநாளன்று புத்தாடை அணிந்து தங்களது வீடுகளின் முன் புதுப் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு சப்தமிட்டு கொண்டாடுவது தமிழர்களின் பாரம்பரியம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள தென்பாகம்
காவல் நிலையத்தில் இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

காவலர்கள் தங்களது வழக்கமான காக்கி சீருடையை அணியாமல் கொண்டாட முடிவு செய்தனர். தங்களது வீடுகளில் கொண்டாடுவது போல் பாரம்பரிய முறையில் ஆண் போலீஸார் வேட்டி, சட்டை அணிந்தும், பெண் போலீஸார் சேலை அணிந்தும் கலந்து கொண்டனர். ஆண்கள் வெள்ளை நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தனர். காவல்நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து காவல் நிலைய வாசலில் மிக பிரம்மாண்டமாக கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு
பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு சப்தமிட்டு கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தென்பாகம் காவல் ஆய்வாளர், திருமுருகன், காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆண்,பெண் காவலர்களோடு இணைந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்பாகம் காவல் நிலையத்தில் முன்பு ஆய்வாளராக பணியாற்றி தற்போது கோவில்பட்டியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ராஜாராம் தமிழ் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து
பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார் பின்னர்
புதுப்பானையில் அரிசி போட்டு பொங்கலிட்டார். தென்பாகம் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் ராஜாராம்
, சப் இன்ஸ்பெக்டர், மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து பெண் காவலர்கள் ஆண் காவலர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடியது மிகவும் சிறப்பாக அமைந்தது.
செய்தி தொகுப்பு
ஆத்திமுத்து
போலீஸ் செய்தி

