தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து சட்டமன்ற தேர்தலுக்கான ஓருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அதன்படி அந்த குழுவுடன் இணைந்து 234 தொகுதி பொறுப்பாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி மேயர் ஜெகன் பொிசாமியை தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை ஆதிதமிழர் புரட்சி கழகம் நிறுவனத்தலைவர் இளவரச பாண்டியன் மாியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
அப்போது மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் “திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்து நல்லமுறையில் பணி செய்திட வேண்டும். எங்கள் தலைமை அறிவிக்கும் முடிவுகளுக்கு கூட்டணி கட்சிகள் துணையாக இருந்து முழு ஓத்துழைப்பு அளித்து வருகின்றனர். திமுக ஆட்சியில் எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.
2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை எங்கள் தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தில் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு நீங்கள் களப்பணியாற்றுங்கள். அதே போல் 2024ல் நடைபெற்ற எம்பி தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியை எதிர்த்துபோட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்ததை போல் இந்த மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். என்று முதலமைச்சர் கடந்த 30ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் கூறியதற்கிணங்க வரும் தேர்தலில் 6 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். இரண்டாவது முறையாக மீண்டும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பணியாற்றுவதற்கு முழுமையான ஆதரவை கொடுத்து அதற்கான பணிகளை கடமை உணர்வோடு பணியாற்றுங்கள் என்று தொிவித்தாா்.”
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதமிழர் புரட்சி கழக மாவட்ட செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர திமுக ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.

