தூத்துக்குடி
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்து ஒன்றிய அரசின் ஏஜென்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களை செய்யும் ஆளுநரை காப்பாற்றிடவும் ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றும் வித்தைகளை செய்யும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்து, சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், ராஜாகன்னு, முத்துலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், இராஜா, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, மும்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதக்கண்ணன், அன்புராஜன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், மதியழகன், குபேர்இளம்பரிதி, கவிதாதேவி, அபிராமிநாதன், அசோக், சீனிவாசன், ஜெபசிங், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, பார்வதி, பெனில்டஸ், பிரதீப், ஜோசப், நிக்கோலாஸ்மணி, நாகராஜன், ராதாகிருஷ்ணன், டினோ, அருண்குமார், குருராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்சுந்தர், பரமசிவம், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆனந்த சேகர், ரூபஸ், ரூபராஜா, முருக இசக்கி, ஜெயக்கனி, ரவி, செல்வின், பிரவீன்குமார், வினோத், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், நாராயணவடிவு, பகுதி இளைஞர் அணி அமைப்பாளரகள்; சூர்யா, செந்தூர்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வகுமார், சேர்மபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகபெருமாள், ஜெபதங்கம் பிரேமா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், முத்துச்செல்வன், இந்திரகாசி, சாகுல்ஹமீது, ஆறுமுகபாண்டியன், ராஜலெட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், அருண்குமார், ரவி என்ற பொன்பாண்டி, சாரதா பொன்இசக்கி, ஆரோக்கிய மேரி, பேரின்பராஜ், செல்வகுமார், ரகுராமன், வீரபாகு, ஜான்பாண்டியன், துறைமுகம் ராமசாமி, ஜனஹர், சுரேஷ், ராஜேஷ், ஆனந்த், மகாவிஷ்ணு, ஸ்ரீதர்ரொட்ரிகோ, சுரேஷ்குமார், ரங்கநாதன் என்ற சுகு, கலீல் ரகுமான், செல்வபெருமாள், ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், சுதாகர், அம்பா சங்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், பாலசிங், இளங்கோ, நவின்குமார், சதீஷ், ரவி, கொம்பையா, கோட்டாளம், பார்த்திபன், ஜோசப், ரமேஷ், பாலமுருகன், பொன் முருகேசன், இளையராஜா, சரவணக்குமார், ராமசாமி, சுரேஷ்காந்தி, பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், பேரூர் செயலாளர்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீதமுத்துக்குமார், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், நவநீதபாண்டியன், ஜமீன் சாலமோன், மால் ராஜேஷ், முருகானந்தம், ஒன்றிய துணைச்செயலாளர் வக்கீல் நாராயணன், கணேசன், ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள்; வெயில்ராஜ், தர்மராஜ், பூபேஸ்நாதன், நகர செயலாளர் சுடலை, உள்பட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கும், ஆளுநருக்கும் அதிமுகவிற்கு எதிராகவும், கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்:
மேயர் ஜெகன் பெரியசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை செயல்படவிடாமல் ஆளுநர் மூலம் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருவதோடு, கடந்த ஆண்டும் இதே போல் பிரச்சனையை எழுப்பினார். தமிழக சட்டசபையில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மரபாக இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதை நம்முடைய சபாநாயகர் தெரிவித்த பிறகும் அப்பிரச்சனை எழுப்புவது கண்டிக்கத்தக்கது. ஆளுநரின் வேலை என்ன, பல்கலைகழகத்தின் வேந்தர் யார், தற்போது பல்கலை கழகத்தில் நடக்கும் விசயங்கள் எல்லோருக்கும் தெரியும். தமிழக மக்களின் ஒற்றுமையை கலைக்க முடியாது. ஒன்றிய அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கிற நிலையில், இந்தியாவிற்கே வழிகாட்டும் விதமாக தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்கி வருகிறார். இதுபோன்ற சம்பவத்தை தலைமைக்கழகம் தொடர்ந்து கண்டித்து வரும் வரிசையில் நாங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார்.

