தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர் ஆகியவற்றை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களை தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, இணைச் செயலாளர் சதீஷ்குமார், மூத்த பத்திரிகையாளரும்
சங்கத்தின் ஆலோசகருமான ஆத்திமுத்து செயற்குழு உறுப்பினர் முத்துராமன், டேவிட் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் நேரில் சென்ற நிர்வாகிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு பிரஸ் கிளப்பில் இருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு நிர்வாகிகளுடன் கேட்டுக் கொண்டார்.

