• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் நடைபெற்ற புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டத்தில் தேசத்தின் மக்களுக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும், புத்தாண்டு ஆசீர்வாதத்திற்காகவும், சிறப்பு பிரார்த்தனை : இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பங்கேற்பு!

policeseithitv by policeseithitv
January 2, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் நடைபெற்ற புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டத்தில் தேசத்தின் மக்களுக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும், புத்தாண்டு ஆசீர்வாதத்திற்காகவும், சிறப்பு பிரார்த்தனை : இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பங்கேற்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாசரேத்,ஜன.02.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ மோகன் சி. லாசரஸ் புத்தாண்டு வாக்குத்தத்த செய்தியை கொடுத்தார்.

“நான் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். (யாத்திராகமம் 20: 24 ) என்ற வேதவசன தலைப்பில் புத்தாண்டு வாக்குத்தத்த ஆசீர்வாத செய்தியளித்தார். பின்னர் தேசத்தின் மக்களுக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும், புத்தாண்டு ஆசீர்வாதத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் தேவனுடைய கூடாரத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோல் 2025 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் நேற்று (01/01/2025) மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் குழுவினர் புத்தாண்டு வாக்குத்தத்த பாடல்களை பாடினர்.

வாக்குத்தத்த ஆசீர்வாத செய்தியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி.லாசரஸ் கொடுத்தார். நிறைவாக சிறப்பு பிரார்த்தனையையும் சகோ.மோகன் சி.லாசரஸ் ஏறெடுத்தார்.

இக்கூட்டத்தில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனன் கலந்து கொண்டார்.

புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி,

கன்னியாகுமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவடைந்ததும் ஊர்களுக்கு பொதுமக்கள் திரும்பிச் செல்வதற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குரும்பூர் போலீசார் செய்திருந்தனர்.

Previous Post

2025 -ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் கேக் வெட்டி, வெடிவெடித்து பத்திரிகையாளர்கள் கோலாகல கொண்டாட்டம்!

Next Post

தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள்  ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களை நேரில் சந்தித்து பிரஸ்  கிளப் சார்பில் வெளியிடப்பட்ட டைரி மற்றும் காலண்டர்  ஆகியவற்றை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In