=======
உலகம் முழுவதும் 2025ஆம் ஆண்டு புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு, ஆலயங்கள், கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நண்பர்கள், உறவினர்கள், வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். அதுபோல்
தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.


தூத்துக்குடியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை சார்பாக நள்ளிரவு 12 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜா்ன குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு சுகம் ஓட்டல் அருகில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில், ஏ.எஸ்.பி., மதன், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதுபோல் தூத்துக்குடி டவுண்
பகுதியில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் 2025-ம்
ஆண்டு புத்தாண்டு நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக தெற்கு காவல் ஆய்வாளர் திருமுருகன் ஏற்பாட்டில் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் புதிய சீருடை ஆடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
24 மணி நேரமும் ஓய்வில்லாமல் காவல் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தூத்துக்குடி தெற்கு காவல் ஆய்வாளர் திருமுருகன் புத்தாண்டு நிகழ்ச்சியை வெகு சிறப்பாக கொண்டாடும் விதமாக செய்தமைக்கு
தெற்கு காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என
அனைவரும் தெற்கு காவல் ஆய்வாளர் திருமுருகனுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்தி தொகுப்பு
M.ஆத்தி முத்து
போலீஸ் செய்தி நியூஸ் சேனல்

