=============
பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ஆண்டு தோறும் காலண்டர்கள் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும்
வழங்கப்படுவது வழக்கம் அதன்படி
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சுமார் 15 ஆயிரம்
2025-ம் ஆண்டிற்கான காலண்டர் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளராக எஸ்.பி மாரியப்பன் நாடார், நியமிக்கப்பட்டதிலிருந்து தூத்துக்குடி மாவட்டங்களில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் பனைத் தொழிலாளர்கள் வாழ்வுரிமை மீட்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சமீபத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆதரவோடு பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் மாநிலத் தலைவர் மனிதநேயர் என் ஆர் தனபாலன் நாடார் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பலம் பொருந்திய இயக்கமாக தற்போது பெருந்தலைவர் மக்கள் கட்சி மக்கள் பிரச்சனைக்காக முன் நின்று செயல்பட்டு வருகிறது.


தற்போது பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ் பி மாரியப்பன், மற்றும் மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ் ஆகியோரின் சீரிய முயற்சியில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு சுமார் 15 ஆயிரம் நாள்காட்டிகள் காலண்டர் முன்னாள் முதல்வர் காமராஜர், மற்றும் கட்சியின் நிறுவனத் தலைவர் என் ஆர் தனபால நாடார் மற்றும் நாடார்களின் சின்னமாக விளங்கி வரும் பனை மரம் ஆகிய படங்களோடு அச்சடிக்கப்பட்டு காலண்டர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாபாரிகளுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் சென்று வழங்கி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு : சிவக்குமார்.

