தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி: 2021ல் தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்து பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பின் இரண்டாவது முறையாக அதே பகுதியை பார்வையிட்டு இதுபோன்ற நிலைமை இனி வரக்கூடாது என்று நமக்கெல்லாம் அறிவுரை கூறியதின் பேரில் அனைவரும் இணைந்து பணியாற்றினோம். கடுமையான பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக கால்வாய், சாலை வசதிகள், வடிகால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டு பெய்த கனமழையின் போது சிறிது பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் சிறிய, பெரிய மோட்டர்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. சில வழித்தடங்களின் மூலமும் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. பல இடங்களில் கழிவுநீர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தினோம். அதன்பின் தொடர்ச்சியாக நாம் பணியாற்றியதின் மூலம் இந்தாண்டு பெரிய அளவில் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களை பாதுகாத்தோம். இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பே காரணம். புறநகர் பகுதிகளில் இருந்து வந்த வெள்ளநீரால் தூத்துக்குடி மாநகரத்தின் ஒருசில பகுதிகளில் சில பாதிப்புகள் ஏற்பட்டது. அதை உடனடியாக சரிசெய்யப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு பெரியஅளவில் பாதிப்பில்லை. தூத்துக்குடியில் கோரம்பள்ளம், செங்குளம், மாடன்குளம் உள்பட பல பகுதிகளில் உள்ள ஓடைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் மாநகரில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 206 பூங்காக்கள் இருக்க வேண்டிய மாநகராட்சி பகுதிகளில் சில ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அதை முறைப்படுத்துவோம். மேலும் காணும் பொங்கலை மக்கள் கொண்டாடும்; வகையில் மாநகராட்சி பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது, என்று பேசினார்.

பின்னர் கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைசெல்வி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் விஜயகுமார், ராமர், கண்ணன், முத்துமாரி, மந்திரமூர்த்தி, வீரபாகு, கந்தசாமி, இசக்கிராஜா, காந்திமதி, முத்துவேல் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற பணிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், தங்கள் வார்டு பகுதிகளில் உள்ள சிறு சிறு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி கவுன்சிலர்கள் பேசினார்கள்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பதிலளித்து பேசுகையில், 16, 17, 18 வார்டு பகுதிகளில் தான் மற்ற பகுதிகளில் இருந்து வந்த மழைநீர் அந்த பகுதிகளில் இருந்த காலி மனைகளில் தேங்கிய மழைநீரால் அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதையும் பல்வேறு வகையில் முறைப்படுத்தி முறையாக செய்துள்ளோம். அதேபோல் பல பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்தை முழுமையாக பேணி பாதுகாக்கும் வகையில் பணியாளர்களும் களத்தில் உள்ளனர். 2021-க்கு முன் இருந்த நிலைமையை கண்டறிந்து அதனை மாற்றி கடந்த காலத்தில் திறம்பட செயலாற்றினோம், இனி வரும் எதிர்காலத்தை நினைத்து 2025ல் செயல்படுவோம். 60 வார்டுகளிலும் பாரமற்றமின்றி முறையாக பணிகள் நடைபெறும். எல்லோருடைய ஒத்துழைப்பாலும், என்று பேசி 100வது பிறந்த நாள் கொண்டாடிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மாநகராட்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கடிதத்தில் தற்போது மாறிவரும் பருவக்கால நிலைகளை மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசானது உலக வங்கி உதவியுடன் நகர்புறங்களில் காலநிலை மாற்றங்கள் குறித்தான நடவடிக்கை திட்டத்தினை மேற்கொள்ளும் விதமாக குழுக்கள் அமைத்து பருவ காலங்களில் உருவாகக் கூடிய சவால்களை எதிர்நோக்கும் விதமாக புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக மேற்படி குழுக்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை கூடி பருவகால மாற்றங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும், குழுவில் உறுப்பினர்களாக ஆறுமுக குமார், பிரட்ரிக், ஜெபஸ்டீன் சுதா, மெடில்டா, ஏஞ்சலின், ராமசாமி, மீனா, தங்கராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொழில் உரிமம் கட்டண உயர்வு உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், துணை ஆணையர் சரவணக்குமார், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமார், பாலமுருகன், வெங்கட்ராமன், இர்வின் ஜெபராஜ், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, ராமச்சந்திரன், கல்யாணசுந்தரம், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, சரவணக்குமார், பொன்னப்பன், வைதேகி, சுப்புலெட்சுமி, பவானி, அதிஷ்டமணி, சரண்யா, சோமசுந்தரி, தனலெட்சுமி, பேபி ஏஞ்சலின், ராஜதுரை, பட்சிராஜ், தெய்வேந்திரன், விஜயலெட்சுமி, ஜாக்குலின் ஜெயா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக கவுன்சிலர் வீரபாகு மாநகராட்சியில் சில தனியாரிடம் ஒப்படைத்ததால் தேவையில்லாத செயல்களும் பண விரையங்களும் ஏற்படுகிறது என்று சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார். உடனே திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார் குறுக்கிட்டு பேசியதால், நான் மேயரிடம் பேசுகிறேன், இவர் குறிக்கீடுவது தேவையில்லாதது, தேவையில்லாத வேலையில் ஈடுபடாதீர்கள் என்று தெரிவித்தார். அதற்கு மேயர் நான் பதில் கூறுகிறேன் என்று சமாதானப்படுத்தி தனியாரிடம் இருப்பதை மாநகராட்சி செயல்படுத்தும் வகையில் உங்கள் ஒத்துழைப்போது மாற்றியமைக்க வழிவகை செய்யப்படும் என்று பேசினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவையொட்டி காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஷ், எடின்டா, கற்பககனி கருப்பு பேட்ஜ் அணிந்து மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

