தூத்துக்குடி, டிச, 26
தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பாக முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமார் ஏற்பாட்டின் பேரில், தென் மண்டல பொறுப்பாளர் சஜி தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ, மாணவிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 250 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்்ச்சியில் எஸ்.டி.ஆர் சாமுவேல், உஷா அன்னை பெஸி, சுகந்தி, இக்னேஷியஸ், கண்ணன், கிறிஸ்து ராஜா, ராஜா, டெனி, கிரி, பாபு, அபர்ணா, கௌசல்யா, மணிராஜ், கிஷாந்த், கெமில்டன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

